ஏதோ நடக்கிறது… மர்மமாய் இருக்கிறது!

உச்ச நட்சத்திரத்தின் அரசியல் அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக அவர் வீட்டுக் கதவைத் திறந்து நின்று வாயைத் திறந்தாலே, அடுத்த நாள் வரை விவாதங்கள் தூள் கிளம்பும். ஆனால் ஒரேயடியாக தனது அரசியலுக்கு அவர் முழுக்குப் போடுவதாக மூன்று பக்க அறிக்கை கொடுத்ததை செய்தியாக வெளியிட்டு, பேருக்கு ஓரிரு விவாங்களை நடத்தியதோடு அத்தனை சேனல்களும் அமைதியாகிவிட்டன, அச்சு, இணைய ஊடகங்களில் பெரிதாக எந்தத் துப்பறியும் கட்டுரைகளும் இடம்பெறவில்லை. அதன் பிறகு உச்ச நட்சத்திரமும் குறைந்தபட்சம் […]

ரஜினி அரசியல்… முடிவுக்கு வந்தது கால் நூற்றாண்டுகால எதிர்ப்பார்ப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும் என்றும் கடந்த டிசம்பர் 3-ந்தேதி அறிவித்திருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் […]

ரஜினி புதிய கட்சி… அதிமுகவின் சைதை துரைசாமி பகிரங்க ஆதரவு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நேற்று அறிவித்தார். இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த், “ஜனவரியில் கட்சி துவக்கம், வருகின்ற டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு” என்று சொல்லி இருக்கிறார். இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972-ல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மாற்றத்தைப்போல அமையக்கூடிய திருப்பத்தை, ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் […]

ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்! – ‘லேட்டுதான்… ஆனா லேட்டஸ்ட்’ ட்ரெண்டிங்!!

சென்னை: நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்  என்னும் ஹேஷ்டேகை டிரண்டாக்கி ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசிலுக்கு வரவேண்டும் என கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக ரசிகர்கள் தவம்கிடக்க, ரஜினியோ அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதில்காலம் தாழ்த்தி வந்தார். பல வருடங்களுக்கு பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாகவும், தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் கடந்த 2017ம் ஆண்டு திட்டவட்டமாக கூறினார். ஆனால், எப்போது, எப்படி என்பதை தெளிவுப்படுத்தாமல் மீண்டும் ரசிகர்களை […]

ஊழல் திமுக… ஒரே மாற்று மருந்து ரஜினிதான்! – தமிழருவி மணியன்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு, வணக்கம். முன்னாள் அமைச்சர் திரு.பொன்முடியின் மகன் திரு.கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடுகள் திரு. பொன்முடி கலைஞர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உயர் கல்வி […]

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தடுத்துவிட முயல்கின்றனர்! – தமிழருவி மணியன்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு…. வணங்கி மகிழ்கிறேன். ஒருவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானால் அதைப் பற்றி அடுத்த கணமே அழுக்கு வார்த்தைகளால் அருவருப்பான நடையில் விமர்சனம் செய்து தங்கள் மன வக்கிரத்தை வெளிப்படுத்தும் ஒரு கூட்டம் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதற்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. எதையாவது ஒரு கருத்தை ஊடகங்களில் வெளிப்படுத்தும் போது விருப்பு வெறுப்பின்றி அக்கருத்து அமைவதுதான் நலன் பயக்கும். உடனே ஒரு செய்திக்கு எதிர்வினை […]