வெறும் ஒன்பது கதாபாத்திரங்களை ஒரு சிறு படகில் வைத்துக் கொண்டு 125 நிமிடங்களை சுவாரஸ்யமாய் கொண்டு செல்ல முடியுமென்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சிம்புத்தேவன். தரவுகளோடு கூடிய கூர்மையான வசனங்கள் திரைப்படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன உடன் யோகிபாபு தனது நடிப்பினால் அசத்தியிருக்கிறார். பிழைப்பிற்காக வெளியூர்களிலிருந்து நகரத்திற்குள் படையெடுக்கும் கூட்டமும், பெரும் வணிகங்களும், தொழிற்சாலைகளும், நகர விரிவாக்கமும் ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் பூர்வகுடிகளை என்ன செய்கிறது? நகரின் மையத்தை விட்டு வெளியே நகர்த்தப்படும் போது உளவியல் ரீதியாய் அவர்களுக்கு ஏற்படும் […]
Tag Archives: யோகி பாபு
கான்ட்ராக்டர் நேசமணி… தொடங்கியது படப்பிடிப்பு!
நடிகர் யோகிபாபுவும், நடிகை ஓவியாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.. யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற […]