சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. ஹெட் மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள, இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா, அபி அன்ட் அபி சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமாஸில் நடந்தது.

இந்நிகழ்வில் இயக்குநர் பாலா அரன் பேசுகையில், “இப்படம் டார்க் ஜானரில் ஒரு புது முயற்சியாக செய்துள்ளோம். மூடர்கூடம், சூது கவ்வும் படங்கள் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இப்படம் எடுக்கப்பட்ட முழு அனுபவமும் மிக சவாலானதாக இருந்தது. இந்தப்படம் இந்த மேடைக்கு வர கேபிள் சங்கர், நலன் குமாரசாமி, ஞானவேல் ராஜா ஆகியோர் தான் காரணம். அந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்”, என்றார்.

தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் செல்வராஜ் பேசுகையில், “நானும், பாலாவும் கல்லூரி தோழர்கள் படிக்கும் போது நானும் அவனும் இணைந்து இந்த படத்தை, பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்கள் வைத்து செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பின் பல போராட்டங்களுக்கு பிறகு நாமே செய்யலாம் என இறங்கி செய்தோம். இந்தப்படம் நாங்கள் இந்த மேடைக்கு வரும் என நினைக்கவில்லை, ஆனால் இப்போது இது பெரிய அளவில் ரிலீஸாவது மகிழ்ச்சி,” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், “2 வருஷம் முன்னாடி டிரெய்லர் மட்டும் காட்டினார்கள் அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும்படத்தில் செய்ததை முழு நீளப்ப்படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தை பெற வேண்டும் அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி,” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அபி அன்ட் அபி அபினேஷ், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள்:

எழுத்து இயக்கம் – பாலா அரன்
ஒளிப்பதிவு – விக்னேஷ் செல்வராஜ்
இசை – சுரேன் விகாஷ்
படத்தொகுப்பு – ராம் சதீஷ்
கலை – சந்தோஷ்
மக்கள் தொடர்பு – நிகில்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *