சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி தந்த கௌரவம்… முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து!

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக […]

பிணங்கள் எரியும் பின்னணியில் ரொமான்ஸ்! – பனாரஸ் நாயகனுக்கு வந்த சோதனை

கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ […]

நடிகை மீனாவின் கணவர் மரணம்

தமிழ் திரையுலகின் முதல் நிலை நடிகையாகத் திகழ்ந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த கணிப்பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்தியிருந்த மீனா, சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நடிப்பைத் ,தொடர்ந்தார். த்ரிஷ்யம், அண்ணாத்த போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடி்த்தார். […]

ஆஹா வழங்கும் ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ இணையத் தொடர்

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களைக் கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த […]

ஓலா மின் வாகன விற்பனையில் பெரும் சரிவு!

  சென்னை: மின்சார கார் மற்றும் இருசக்கர தயாரிப்பில் முன்னோடியாக உள்ள ஓலா நிறுவனத்தின் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஓலா நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் விற்பனை சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை சரிந்துள்ளது. மின்சார வாகனங்களில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்களால், அவற்றைப் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மின்சாரம் ஏற்றும் நேரத்தில் பேட்டரிகள் வெடிப்பது மற்றும் தீப்பிடித்து எரிவது அதிகரித்து […]

தமிழ்நாடு ஒருபோதும் எனக்கு கசப்பான நினைவுகளைத் தந்ததில்லை! – கிச்சா சுதீப்

கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் ‘விக்ராந்த் ரோணா’. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சத்யம் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிச்சா சுதீப்பிடம் சுதீப், விக்ராந்த் ரோணா படத்தை அனைத்து இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் […]

வெளியானது ஷாருக்கானின் பதான் முதல் தோற்றம்!

அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஒருகாலத்தில் தொடர்ந்து வெள்ளி விழாப் படங்களையும், உலக அளவில் பெரும் வெற்றிப் பெற்ற படங்களையும் கொடுத்து வந்த ஷாருக்கான், சமீப ஆண்டுகளில் பெரிய வெற்றிப் படம் எதையும் தரவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு சோர்வை அளித்திருந்த நிலையில், முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை ஆதித்ய சோப்ரா இயக்கி வருகிறார். சமீபத்தில் பெரும் வெற்றிப் பெற்ற வார் […]

தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் 617 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 […]

கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ முன்னோட்டம்… 6 மொழிகளில் 25 மில்லியன் பார்வைகள்!

கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் ‘விக்ராந்த் ரோணா’. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விக்ராந்த் ரோணா முன்னோட்டம் (தமிழ்): https://www.youtube.com/watch?v=FU_LrZydhBE&list=PL4uyuv0FVO9wIvzlPjGSlCAcVPhOq4HqK&index=6

ராக்கெட்ரி படத்தின் இயக்குநரானது ஏன்? – மாதவன்

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. வரும் ஜூலை 1 முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் தொடர்பாக நடிகர் மாதவன் ஊடகர்களைச் சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விழாவில் மாதவன் பேசும்போது, “‘விக்ரம் வேதா’ படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் […]