உலகளவில் ரூ 425 கோடியைக் குவித்த டங்கி!

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வருகிறது! இந்தியாவில் 210 கோடி மற்றும் உலகளவில் 425 கோடியைக் குவித்துள்ளது இந்தப் படம். திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இப்படம் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நெருக்கமான படைப்பாக அமைந்துள்ளது. பார்வையாளர்களிடமிருந்து வரும் பாசிட்டிவ் வார்த்தைகளுடன் டங்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதை, பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ள டங்கி, […]

வெளியானது ஷாரூக்கானின் டங்கி படத்தின் முதல் பாடல்!

  ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டியின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவாகியுள்ள டங்கி படத்தின் இசைப் பயணம் தொடங்கியுள்ளது. படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா…” உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதையாக பாடல் முழுதும் […]

1000 கோடி வசூலில் புயலைக் கிளப்பும் ஷாருக்கானின் ‘ஜவான்’!

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்கள் தலா 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதுடன், இத்தகைய சாதனையைப் படைத்த ஒரே நடிகர் என்ற பெருமிதத்தையும் ஷாரூக்கான் பெற்றிருக்கிறார். ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் […]

பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பும் ‘விக்ரம் வேதா’!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் – சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் தமிழில் சாதனை படைத்த இயக்குநர்கள் புஷ்கர் காயத்திரி மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஆகிய இருவரும், இந்தியிலும் தங்களது புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி, தமிழ் மண்ணின் கலாச்சாரத்தையும் கலை வடிவத்தையும் […]

வெளியானது ஷாருக்கானின் பதான் முதல் தோற்றம்!

அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஒருகாலத்தில் தொடர்ந்து வெள்ளி விழாப் படங்களையும், உலக அளவில் பெரும் வெற்றிப் பெற்ற படங்களையும் கொடுத்து வந்த ஷாருக்கான், சமீப ஆண்டுகளில் பெரிய வெற்றிப் படம் எதையும் தரவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு சோர்வை அளித்திருந்த நிலையில், முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை ஆதித்ய சோப்ரா இயக்கி வருகிறார். சமீபத்தில் பெரும் வெற்றிப் பெற்ற வார் […]

ரஜினி நடித்த அதிக இந்திப் படங்களுக்கு இசையமைத்தவர் பப்பி லஹிரி!

சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தியில் நடித்த அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் பப்பி லஹிரிதான். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் இந்தியில் நடித்த மொத்த படங்கள் 28. இவற்றில் சரி பாதி, அதாவது 14 படங்களுக்கு இசை பப்பி லஹிரிதான். அந்தப் படங்களின் பட்டியல்… ஜீத் ஹமாரி, மேரி அதாலத், கங்குவா, மகாகுரு, வாஃபாதார், கிராஃதார், பேவாஃபா, தமாச்சா, கைர் கனூனி, ஃபரிஷ்டே, பூல் பனே அங்காரே, தியாகி, இன்சானியாத் கி […]

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்!

டெல்லி: இந்தியாவில் 80 மற்றும் 90-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் இருந்த லஹிரி நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நள்ளிரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி […]

83… உலகக் கோப்பை நாயகர்களின் உண்மைக் கதை!

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அணிக்கு வரலாற்றில் முக்கியமான நாளாகும். உலக்கோப்பை போட்டிகளில் அரையிறுதி கூட நெருங்காத இந்தியா முதன்முறையாக அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்நிலையில் அதனை கண்முன்னே கொண்டு வரும் ஒரு […]

நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா!

  மும்பை: படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸின் புது வகை வேறு பரவி வருவதால் பலரும் பயத்தில் இருக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் […]