மாநிலங்களவை எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்… குவியும் வாழ்த்துகள்!

டெல்லி: விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குளில் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இளையராஜாவின் படைப்புகள் தலைமுறை தலைமுறையாக மக்களைக் கவர்ந்துள்ளன. அவரது படைப்புகள் […]

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’… காதலே அரசியல்!

பெரும் வரவேற்பு பெற்ற சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கி வரும் புதிய படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப் படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர், ஹரி, தாமு, வின்சு, வினோத், சுபத்ரா, உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு -கிஷோர், இசை -டென்மா, படத்தொகுப்பு- செல்வா ஆர்கே, கலை ரகு, நடனம் -சாண்டி, சண்டை- ஸ்டன்னர் சாம், உடைகள் – அனிதா ரஞ்சித், […]

தமிழ் சினிமாவின் பெருமையை உலக அளவில் உச்சத்துக்குக் கொண்டுபோன ‘கடைசி விவசாயி’!

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’. ;கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த பாராட்டுக்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப்படம், திரையரங்குகளில் வசூல் ரீதியாக […]

அமெரிக்காவில் எப்படி இருக்கிறார் டி ராஜேந்தர்?

  சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆரின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் சென்னையில் டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை […]

சமையல் எரிவாயு விலை ரூ 50 உயர்வு!

சென்னை: இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது. இதில் வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ..8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை […]

யானை பட விமர்சனம்

  நடிகர்கள்: அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: கோபிநாத் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் இயக்கம்: ஹரி யார் என்ன சொன்னாலும், விமர்சனம் செய்து நகையாடினாலும், தன் பாணியிலிருந்து சற்றும் பாதை விலகாதவர் இயக்குநர் ஹரி. காரணம், அவரைப் பொறுத்தவரை, அவரது தயாரிப்பாளரைப் பொறுத்த வரை, இந்த பாணிப் படங்கள் பெரும்பாலும் வசூலில் சொதப்பாதவை. இடையில் ஹரி எடுத்த சாமி 2 மட்டுமே எடுபடாமல் போனது. இப்போது மீண்டும் யானையில் […]

ராக்கெட்ரி: நம்பி விளைவு – விமர்சனம்

நடிகர்கள்: ஆர் மாதவன், சிம்ரன் ஒளிப்பதிவு: சிரிஷா ராய் இசை (பாடல்கள்): நேட் கார்னல், பில்லி டாவ்சன் இசை (பின்னணி): சாம் சிஎஸ் தயாரிப்பு: ஆர் மாதவன், சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் எழுத்து, இயக்கம்: ஆர் மாதவன் இந்திய விண்வெளித் துறை இஸ்ரோ (ISRO) இன்று சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்து வருகிறது. நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலங்களை அனுப்பும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்றால் அது ஒரு நாளில் அல்லது ஆண்டில் நிகழ்த்தப்பட்ட […]

‘காட்டுல… காட்டுல…’ அருண் விஜய் – ஹரியின் யானை புதிய வீடியோ!

அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல […]

‘என்னை மன்மதலீலையில் சிக்க வச்சவர் கமல் ஹாஸன்தான்’! – ராதாரவி கலகல பேச்சு

கனல் படத்தின் தயாரிப்பாளர் ஜெய்பாலா இந்த நிகழ்ச்சியில் பேசியது: டஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம். படத்தில் தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ள.து இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுங்கள்,” என்றார் இசை அமைப்பாளர் தென்மா பேசுகையில், “கானாமுத்து வழியாக இந்தப்படம் எனக்கு வந்தது. இந்தப்படத்தின் பாடல் வேலைகள் மிகவும் சவாலாக இருந்தது. சமயமுரளி சாருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. இந்தப் புதுப் படக்குழுவிற்கு இந்தப்படம் நல்ல […]

எச்சரிக்கை… ‘டெவில்’ இசையமைப்பாளரானார் இயக்குநர் மிஷ்கின்!

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர் ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். படத்தின் மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள். எல்லாவற்றையும் […]