இயக்குநர் – நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57 இவரது மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்நீச்சல் தொடருக்கான டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெள்ளித்திரையில் மட்டுமல்ல, தொலைக்காட்சி தொடர்களிலும் கலக்கி வந்த மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பின்னர் […]

முதல் வாரம்… எவ்வளவுதான் வசூலித்தது ரஜினியின் ஜெயிலர்?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசூல் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படம் வெளியான முதல் நாளான ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரூ 39 கோடிவரை தமிழகத்தில் வசூலித்ததாகவும், உலகெங்கும் ரூ 115 கோடியை வசூலித்ததாகவும் […]

ஜெயிலர் 2-ம் பாகம்… நெல்சன் ரெடி… நடிப்பாரா ரஜினி?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசூல் ரூ.300 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில், அடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக நெல்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதுபோல் […]

வான் மூன்று பட விமர்சனம்

தற்கொலைக்கு முயலும் சுஜித் குமார் (ஆதித்யா பாஸ்கர்), அந்த முயற்சியில் தோற்று உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில்  சேர்க்கப்படுகிறார். அதே மருத்துவமனையில் சுவாதியும் (அம்மு அபிராமி) சேர்க்கப்படுகிறார. அதே காரணம்தான். இருவரும் அவரவர் வாழ்வில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தற்செயலாக நடந்த இவர்களின் சந்திப்பின் அடுத்தடுத்த நிகழ்வுகள் என்ன என்பது ஒரு கதை.  அடுத்தடுத்து எத்தகைய நிகழ்வுகளுக்கு எடுத்துச் செல்கிறது என்பது ஒரு கதை. அடுத்து, திருமணம் […]

சினிமாவுக்கு தோள்கொடுக்கும் நண்பன் குழுமம்!

ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை  வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான […]

பிரமாண்டமாய் நடக்கும் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா

சென்னை: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் சிறை அதிகாரியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் காவாலா, ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் […]

சம்பவம் செய்த மாவீரன்… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்து, ஜூலை 14-ம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மடோன் அஸ்வினின் முந்தைய படமான ’மண்டேலா’ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று (ஜூலை […]

லால் சலாம்… படப்பிடிப்பை நிறைவு செய்தார் ரஜினிகாந்த்!

தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று ‘லால் சலாம்’ படத்தில் […]

மாவீரனுக்கு தடையில்லை!

சென்னை: இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ளது. ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்துக்கு எதிராக ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை […]

16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு மரணம் – பாரதிராஜா, கமல் இரங்கல்

  கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ‘கன்னி பருவத்திலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். மேலும், முன்னணி நடிகர்கள் பலரையும் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பாரதிராஜா, “16 வயதினிலே’ திரைப்படத்தின் வாயிலாக […]