எச்1 பி விசா கட்டுப்பாடுகள் நீக்கம்!

1

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, எச் 1 பி மற்றும் எச் 4 ஆகிய விசாக்கள் வழங்கப் படுகின்றன. இந்திய தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள்தான், இந்த விசாவால் அதிகம் பயனடைந்தனர். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், எச் 1 பி விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து, எச் 1 பி விசா வழங்க, டிரம்ப் இடைக்கால தடை விதித்தார்.அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின், இந்த விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க குடியேற்றத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எச் 1 பி விசா தொடர்பாக, முன்னாள் அதிபர் டிரம்ப் பிறப்பித்த கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.