நியூயார்க்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் பனியால் மூடப்பட்டு நகரமே வெண்பனிமயமாகக் காணப்படுகிறது வெப்ப நிலை பூஜியத்திற்கும் கீழ் சென்றதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத […]
Tag Archives: அமெரிக்கா
புளோரிடாவை புரட்டிப்போட்ட இயான் புயல்.. பலி எண்ணிக்கை 80 ஆனது
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் […]
டெக்சாஸ் பள்ளியில் துப்பாாக்கிச் சூடு… 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி!
உவால்டே: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பள்ளியின் ஆசிரியரும் ஒருவர். சான் அன்டோனியோ நகருக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் 18 வயதுடைய ஒரு நபர் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவில்லை. தாக்குதல் நடத்திய நபர் பக்கத்தில் உள்ள பள்ளியில் […]
அமெரிக்கா… ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு மேல் தொற்று… 2000ஐத் தாண்டியது மரணம்!
வாஷிங்டன்: 2020-ல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே, அதிக பாதிப்புக்குள்ளானது அமெரிக்காதான். அங்குதான் அதிவேகமாகப் பரவத் தொடங்கியது கோவிட் 19 எனும் கொரோனா. பின்னர் 2021-ல் டெல்டா வைரஸ் பரவியபோதும், பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது அமெரிக்காதான். இப்போது கொரோனாவின் மூன்றாவது திரிபான ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸின் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இந்த நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரு […]
மாநாடு…. அமெரிக்காவில் 200க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகும் முதல் சிம்பு படம்!
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் மாநாடு திரைப்படம் உலகம் முழுக்க நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் சிம்பு படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அமெரிக்கா முழுவதும் கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அமெரிக்க திரையரங்குகள் பட்டியல்:
எச்1 பி விசா கட்டுப்பாடுகள் நீக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, எச் 1 பி மற்றும் எச் 4 ஆகிய விசாக்கள் வழங்கப் படுகின்றன. இந்திய தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள்தான், இந்த விசாவால் அதிகம் பயனடைந்தனர். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், எச் 1 பி விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்தார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து, எச் 1 பி விசா வழங்க, டிரம்ப் இடைக்கால […]
அமெரிக்கா: மேலும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை!
பிலடெல்பியா: அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கழுத்தில் டெரெக் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு எழுந்த போராட்டங்களால் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் வன்முறை குறித்தும், கருப்பினத்தவர் மீது காட்டப்படும் பாகுபாடுகள் குறித்தும், இனவெறி […]
இந்திய எல்லையில் 60000 ராணுவத்தினரைக் குவித்துள்ளது சீனா! – மைக் பாம்பியோ
வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் ‘மோசமான நடத்தை’ குவாட் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய குவாட் என்ற குழுவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு பிறகு இந்த […]