கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க புதிதாக பிரபல நடிகர் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். 5 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், […]
Tag Archives: கமல் ஹாஸன்
கொரோனா பாதித்த கமல் ஹாஸனை நலம் விசாரித்தார் ரஜினி!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் கடந்த 16-ந் தேதியன்று, மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமிக்க இந்திய கதர் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல் ஹாசன் அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் வட அமெரிக்க குழு நிர்வாகிகளை சிகாகோவில், கமல் ஹாசன் சந்தித்து பேசினார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய கமல்ஹாசனுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்தது. காய்ச்சலும் […]
நாகேஷுக்கு சிலை… நாகேஷ் பெயரில் சாலை! – கமல் ஹாஸனின் கோரிக்கை
தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக காமெடி, குணச்சித்திரம், வில்லத்தனம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பால் அசத்தியவர் நாகேஷ். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காலமானார். இன்று அவருடைய நினைவு நாள். இதனை முன்னிட்டுப் பலரும் நாகேஷ் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். நாகேஷை தனது படங்களில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியவர் கமல் ஹாஸன். இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. நாகேஷை நினைவு கூர்ந்து இன்று அறிக்கை விடுத்துள்ள கமல் ஹாஸன், அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் […]
‘இது ஒரு நாடு… இது ஒரு தேர்வு… சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’ – கமல் ஹாஸன்
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். […]
‘கமல்… கட இங்கதான போடப் போறீங்க?’
கமல் ஹாஸனை அரசியலுக்கு வருமாறு மறைந்த அப்துல் கலாம் வற்புறுத்தினார்.” – பொன்ராஜ் “கலாம் பெயரைத் திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” – கமல் ஹாஸன் “என்னங்கடா கலர் கலரா ரீல் வுடறீங்க… கட இங்கதான போடப் போறீங்க. தேர்தலன்னிக்கு பாத்துக்கறோம்!” – மாண்புமிகு வாக்காளர்கள்
ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்! – கமல் ஹாஸன்
சென்னை: அரசியல் கட்சியை ஆரம்பித்தபிறகு தொடர்ந்து அதிமுக அரசை தாக்கிப் பேசி வருகிறார் கமல்ஹாஸன். அதிமுக தரப்பினர் முதலில் கமல் ஹாஸனை கண்டு கொள்ளாமல்தான் இருந்தனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் கமல் ஹாஸனுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்வர் பழனிசாமியே கமல் ஹாஸனுக்கு அரசியல் பேச தகுதியில்லை, அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்து குடும்பங்கள் நாசமாகின்றன என ஒரு போடு போட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “முதல்வரும் பிக்பாஸ் […]
பிக்பாஸ்… கமல் ஹாஸனை வெளுத்த முதல்வர் பழனிசாமி!
பெரம்பலுார்: அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக ஆட்சி குறித்த கமல் ஹாஸனின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “நடிகர் கமல் ஹாஸன் ஓய்வு பெற்ற பின், […]
‘பேன்ட்டை அவுத்துருவாங்க’! – போட்டியாளர்களைத் தெறிக்கவிட்ட பிக்பாஸ்!
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 61-ம் நாளான நேற்று, ஒவ்வொரு போட்டியாளரையும் தனியறைக்கு அழைத்து, “நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்க ளில் சாதித்தது என்ன… பிக்பாஸ் வீட்டுக்கு உங்கள் பங்களிப்பு என்ன?” என்று ரசிகர்களுக்கு கூறுமாறு பிக்பாஸ் கேட்டார். அதற்கு ரமேஷ், ஷிவானி, கேபி, ஆஜீத், சோம், நிஷா, ரம்யா ஆகியோர் என்ன கூறுவது என்று தெரியாமல் திணறினர். அனிதா, “நான் அனைவருக்கும் […]
ஃபிடல் காஸ்ட்ரோ தோற்றத்தில் வந்த கமல்!
பிக்பாஸ் சீஸன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் தோன்றும் கமல் ஹாஸனின் உடை, கெட்டப் பெரிதும் கவனிக்கப்படும் ஒன்றாகும். அந்த வகையில் நேற்றைய கெட்டப்பும் வித்தியாசமாக இருந்தது.. க்யூபாவின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கெட்டப்பில் கமல் வந்திருந்தார்.. காஸ்ட்ரோ போலவே பச்சை வண்ண சூட், கழுத்து வரை பட்டன், இடுப்பில் பெல்ட், பாதி நரைத்த தாடி மீசை என கமல் வந்தது செம கெத்தாக இருந்தது. இது அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு உற்சாகமூட்டியது. பிக்பாஸ் போட்டியாளர்கள் […]