பிக்பாஸ் சீஸன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் தோன்றும் கமல் ஹாஸனின் உடை, கெட்டப் பெரிதும் கவனிக்கப்படும் ஒன்றாகும்.

அந்த வகையில் நேற்றைய கெட்டப்பும் வித்தியாசமாக இருந்தது.. க்யூபாவின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கெட்டப்பில் கமல் வந்திருந்தார்.. காஸ்ட்ரோ போலவே பச்சை வண்ண சூட், கழுத்து வரை பட்டன், இடுப்பில் பெல்ட், பாதி நரைத்த தாடி மீசை என கமல் வந்தது செம கெத்தாக இருந்தது. இது அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு உற்சாகமூட்டியது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலரே, சார் உங்க டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கு என்றனர்.. பாலாஜி ஒரு ராயல் சல்யூட்டே அடித்துவிட்டார்.. சிலர் இந்தியன் கெட்டப் போல இருக்கிறது என்றனர்.. ஆனால், அது காஸ்ட்ரோ கெட்டப் என்பது, பிக்பாஸ் உறுப்பினர்களுக்குத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *