‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…!’

சென்னை: சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) […]

தமிழகம்: கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு

  சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கபட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும். மே 2 ந்தேதி முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு, டிவி தொடர் […]

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு- மாவட்டம் வாரியாக அதிகாரப்பூர்வ விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன. சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதிவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி ஸ்ட்ராங் ரூம்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சீலிடப்பட்ட அந்த அறைகளுக்கு […]

தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா!

  சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,56,917 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 532 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் […]

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது விஜயகாந்த் கட்சி!

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. தே.மு.தி.க. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஜெயலலிதா ஒதுக்கியது போன்று 41 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை. இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் கட்சியாக பா.ம.க.வை அழைத்து அ.தி.மு.க. இடங்களை ஒதுக்கி கொடுத்தது. பா.ம.க. வுக்கு […]

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்! – சசிகலா திடீர் அறிக்கை

சென்னை: நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று நமக்கு ஜெயலலிதா காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும். என்மீது […]

தமிழகம் முழுவதும் விடியவிடிய மழை!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக […]

அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 2500 பொங்கல் பரிசு! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஜனவரி 4 ஆம் தேதி முதல் இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ரொக்கப் பரிசுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் […]

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை! – வானிலை

சென்னை: குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 […]

ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்! – கமல் ஹாஸன்

சென்னை: அரசியல் கட்சியை ஆரம்பித்தபிறகு தொடர்ந்து அதிமுக அரசை தாக்கிப் பேசி வருகிறார் கமல்ஹாஸன். அதிமுக தரப்பினர் முதலில் கமல் ஹாஸனை கண்டு கொள்ளாமல்தான் இருந்தனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் கமல் ஹாஸனுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்வர் பழனிசாமியே கமல் ஹாஸனுக்கு அரசியல் பேச தகுதியில்லை, அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்து குடும்பங்கள் நாசமாகின்றன என ஒரு போடு போட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “முதல்வரும் பிக்பாஸ் […]