‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ

சென்னை: இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணித்தே தீர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, […]

பகிரங்க மன்னிப்புக் கோரினார் எஸ்வி சேகர்!

சென்னை: நடிகர் எஸ்வி சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ‘முகநூல்’ பக்கத்தில் அவதூறு தகவல் பதிவிட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், அமெரிக்கவாழ் தமிழர் முகநூலில் பதிவிட்டிருந்த கருத்தையே பகிர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு எஸ்வி சேகர் […]

டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் கம்பீர அணிவகுப்பு!

சென்னை: இன்று சென்னையில் நடந்த குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்குபெற்ற ஊர்திகளின் விவரங்கள்…. 1-வது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி வலம் வந்தது. அதில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை இடம் பெற்றது. 2-வது அலங்கார ஊர்தியில், வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது […]

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை

சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மற்றும் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் கடைகள் இயங்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முன்பு போலவே […]

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி… 16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் யூட்டிகா (வயது 13). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கனமழையால் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் வீட்டிலிருந்த யூட்டிகா உள்ளிட்ட 3 பேர் மழைவெள்ளத்தை வேடிக்கை பார்க்க சாஸ்திரம்பாக்கம் மதகுக்கு சென்றனர். அங்கு தென்னேரி, குருவன்மேடு, வடக்குப்பட்டு ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி […]

உஷார்…. அடுத்தடுத்து உருவாகும் இரு புயல்கள்!

. சென்னை: வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமுதல் மிக கனமழை பெய்தது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாவதற்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாவதாக எதிர்பார்க்கப்பட்டது. […]

தொடரும் கன மழை… 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகாது என்றும் அறிவிக்கப்பட்துள்ளது. இருப்பினும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், 6 மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சென்னைக்கும் லீவு […]

செம மழை… 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சென்னை: தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களுக்கு நாளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை […]

‘இறங்கி’ வந்தது தக்காளி!

  சென்னை: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியால், தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது. அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்ததால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். இதனைத் அரசின் தொடர்ந்து, பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70, […]