கேஜிஎஃப் 2… இந்திய சினிமாவில் புதிய சாதனை!

ராக்கி பாய் என அழைக்கப்படும் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப் 2. இதன் முதல் பாகம் கேஜிஎஃப் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம், அதைவிட பல மடங்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் நேரடி இந்திப் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது கேஜிஎஃப் 2. வார், தக்ஸ் ஆப் இந்துஸ்தான் போன்ற படங்களின் வசூலையெல்லாம் […]

ரஜினி மகள் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா?

  ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ […]

முதல் முறையாக ஐரோப்பாவில் 28 நாடுகளில் வெளியாகும் கேஜிஎஃப் 2!

  ஐரோப்பா கண்டத்தில் 28க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2. யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் கேஜிஎஃப் 2, வெளயீட்டுக்கு முன்பே பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இதுவரை தமிழ், கன்னடப் படங்கள் வெளியாகாத நாடுகளில் கூட முதல் முறைாக கேஜிஎஃப் 2 […]

தமிழ்த் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள்… மொழிக்கு உரிய மரியாதை தரவேண்டும்! – கேஜிஎஃப் நாயகன் யஷ்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, […]

வர்ண, வர்க்க பேதங்களைப் பேச வரும் வாய்தா!

வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். ஜே. சேது முருகவேல் அங்காரகன் […]

முதல் முறையாக ஒரிஜினல் கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள தமிழ்ப் படம்!

இந்தப்படத்தை நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ளார். கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். பிரபுஜித் படத்தை இயக்கியிருக்கும் நாகராஜ் பாய் துரைலிங்கம், கலாபிரபு தொடங்கி விக்னேஷ் சிவன், ஹெச். வினோத் வரை பல இயக்குநர்களிடம் பல்வேறுபட்ட படங்களில் துணை, உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். இதில் கதாநாயகனாக பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரபுஜித், ஒரு நடிகராக ஏற்கெனவே சுட்டுப் பிடிக்க உத்தரவு ,ஜகமே தந்திரம், பேட்ட போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர் தன் பள்ளி, […]

ஆர்யாவின் கேப்டன் முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: நடிகர் ஆர்யா தற்போது ‘கேப்டன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘கேப்டன்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. […]

பாராட்டு மழையில் கள்ளன்!

எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு பழனியப்பன் நாயகனாக நடித்துள்ள கள்ளன் படம் நெடிய போராட்டத்துக்குப் பிறகு நாளை திரையைத் தொடுகிறது. வி மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பே அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைக் குவித்துவருகிறது. சில தினங்களுக்கு முன் நடந்த படத்தின் இசை வெளியீட்டின்போதே, திரைப்பிரபலங்கள் பலரும் இப்படம் குறித்து நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நாளை படம் திரைக்கு வரும் முன்பே, கடந்த இரு தினங்களாக திரையுலகினர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சிகள் […]

மாறன் பட விமர்சனம்

நடிப்பு: தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த் சந்தோஷம் இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: சத்யஜோதி தியாகராஜன் இயக்கம்: கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படம் வெளியானபோது, அதன் இளம் இயக்குநர் கார்த்திக் நரேனை ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளினார்கள். ஓரிரு ஆண்டுகள் கழித்து அதே கார்த்திக் நரேனின் மாஃபியா படம் வந்தபோது, சினிமா பற்றிய அவரது புரிதலை கேள்விக்குள்ளாக்கினார்கள். இப்போது மாறன் பார்த்தபிறகு, ‘தம்பி… போய் இன்னும் கொஞ்சம் சினிமா கத்துக்கிட்டு வாங்க’ […]

வலிமை திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: அஜித் குமார், ஹ்யூமா குரேஷி. கார்த்திகேயா ஒளிப்பதிவு: நீரவ் ஷா இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: போனி கபூர் – ஜீ டிவி எழுத்து, இயக்கம் – ஹெச் வினோத் அஜித் குமார் நடித்த படங்களிலேயே அதிக எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய படம் வலிமையாகத்தான் இருக்கும். திரையரங்குகள் பக்கம் வரவே ரசிகர்கள் தயக்கம் காட்டி வந்த சூழலில், அண்ணாத்த படம் அவற்றுக்கு ஆக்சிஜன் தந்தது. இப்போது வலிமை இன்னும் ஊக்கம் தந்திருக்கிறது. படத்தின் கதை புதிதா… […]