பாராட்டு மழையில் கள்ளன்!

1

ழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு பழனியப்பன் நாயகனாக நடித்துள்ள கள்ளன் படம் நெடிய போராட்டத்துக்குப் பிறகு நாளை திரையைத் தொடுகிறது. வி மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பே அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைக் குவித்துவருகிறது.

சில தினங்களுக்கு முன் நடந்த படத்தின் இசை வெளியீட்டின்போதே, திரைப்பிரபலங்கள் பலரும் இப்படம் குறித்து நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நாளை படம் திரைக்கு வரும் முன்பே, கடந்த இரு தினங்களாக திரையுலகினர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. படம் பார்த்த அனைவருமே ‘கள்ளன் நல்ல கதை. மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் என்றுப சொல்ல முடியாத அளவுக்கு சந்திரா தங்கராஜ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்’ என்று பாராட்டி வருகின்றனர். தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் படத்தைப் பாராட்டி பதிவுகளையும் இட்டுள்ளனர்.

கரு பழனியப்பனுடன் நிகிதா, சவுந்தர்ராஜா, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு, கே இசையமைத்துள்ளார். எழுதி இயக்கியுள்ளார் சந்திரா தங்கராஜ். எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி மதியழகன் தயாரித்துள்ளார்.