ஆர்ஜே பாலாஜி- என்ஜே சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸ் – பே வியூவ் புராஜெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பிளாக்பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் வீட்ல விசேஷம். இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, கேஏபிஏசி லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட […]
Category Archives: தமிழ் சினிமா
நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் ‘தக்ஸ்’… முதல் தோற்றத்தை வெளியிட்ட திரைப் பிரபலங்கள்!
இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், திரையுலக வணிகத்தைக் கணிக்கும் தரண் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர். ‘தக்ஸ்’ என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா […]
‘இசையென்றால் இளையராஜா’!
NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து, ‘இசையென்றால் இளையராஜா’ எனும் புதிய நிகழ்ச்சியை மதுரையில் நடத்துகிறது. இளையராஜா பங்கேற்று நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும், இசைஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில், மிகவும் குறைந்தவிலையில் […]
பயில்வான் என்ற பூனைக்கு மணி கட்டிய பாடகி சுசித்ரா!
சென்னை: தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட பயில்வான் ரங்கநாதன், 35 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராகவும் செய்தியாளராகவும் உள்ளார். ஆரம்ப காலங்களில் வாய்ப்புகள் இல்லாததால், ஆபாசப் பத்திரிகைகளில் எழுதி வந்ததாக அவரே சக பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளாராம். இப்போது திரைத்துறையில் வாய்ப்புகளே இல்லாத சூழலில், திரைத்துறைப் பிரபலங்கள் தொடர்பாக வாய்க்கு வந்தபடி யூடியூப் பக்கங்களில் பேசிவருகிறார். இவர் மீது புகார் கூறியோ, காவல் துறையிடம் மனு கொடுத்தோ பெரிய ஆளாக ஆக்கிவிடக் கூடாது என்ற நோக்கில் பலரும் இவரைக் கண்டு […]
திருப்பதியில் போட்டோ ஷூட்… விதி மீறல்… மன்னிப்புக் கோரிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!
திருமலை: திருமணம் செய்த கையோடு திருப்பதி சென்ற நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும், திருமலை ஏழுமலையான் கோவிலில் நேற்று பிற்பகல் சாமி தரிசனம் செய்தனர். அடுத்து திருமலையில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலுக்கு வெளியே ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால், அங்கிருந்து சென்றுவிட்ட இருவரும் சிறிதுநேரத்தில் அதே பகுதிக்கு வந்து போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது இருவரும் காலணிகள் அணிந்துகொண்டனர். இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்கு […]
ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார்! – கமல் ஹாஸன்
கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த வாரம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றுள்ளது. ‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் ஹாஸன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், “ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினியிடம் கூற வேண்டும். பின்னர் லோகேஷ்யிடம் கூற வேண்டும். நாங்கள் மூன்று […]
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்… 1 லட்சம் பேருக்கு விருந்து… ரஜினி, ஷாருக்கான் நேரில் வாழ்த்து!
சென்னை: கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் ‘ஐயா’ படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாகத் திகழ்கிறார். தமிழ்நாட்டின் லால்குடியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் தொடர்ந்து 7 வருடங்களாக காதலித்து வந்தனர். ஒன்றாகவே வசித்தும் வந்தனர். எப்போது இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது திரைப்பட ரசிகர்களின் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் அவர்கள் […]
நயன்தாராவுடன் திருமணம் திருப்பதியில் நடக்காதது ஏன்? – விக்னேஷ் சிவன் விளக்கம்
திருப்பதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம், நாளை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்கான காரணத்தை விக்னேஷ் சிவனே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சென்னை: தென்னிந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியான நடிகை நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9-ம் தேதி, அதாவது நாளை வியாழக்கிழமை திருமணம் நடக்க இருக்கிறது. நயன்தாரா இந்த திருமணத்தை எந்தளவுக்கு எளிமையாக ரகசியமாக நடத்த திட்டமிட்டாரோ அதற்கு மாறாக அதைவிட அதிக பரபரப்பாக தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் அளவுக்கு […]
30 மொழிகளில் வெளியாகும் ‘சுழல் – தி வோர்டக்ஸ்’ – ஒரு அறிமுகம்
விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த […]
நயன்தாரா நடிப்பில் O2: வெளியானது புதிய பட முன்னோட்டம்
தமிழில் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம் ‘O2’ திரைப்படத்தை ஜூன் 17 அன்று வெளியிடுகிறது. இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்கே படத்தொகுப்பாளராக […]