ராஜ்குமார் ஹிரானியின் டங்கி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வருகிறது! இந்தியாவில் 210 கோடி மற்றும் உலகளவில் 425 கோடியைக் குவித்துள்ளது இந்தப் படம். திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இப்படம் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நெருக்கமான படைப்பாக அமைந்துள்ளது. பார்வையாளர்களிடமிருந்து வரும் பாசிட்டிவ் வார்த்தைகளுடன் டங்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதை, பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ள டங்கி, […]
Tag Archives: Box Office
முதல் வாரம்… எவ்வளவுதான் வசூலித்தது ரஜினியின் ஜெயிலர்?
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசூல் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படம் வெளியான முதல் நாளான ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரூ 39 கோடிவரை தமிழகத்தில் வசூலித்ததாகவும், உலகெங்கும் ரூ 115 கோடியை வசூலித்ததாகவும் […]
வேலை நாளிலும் நின்று ஆடும் ‘நானே வருவேன்’!
செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இந்தப் படம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி உலகெங்கும் வெளியானது. அதற்கு அடுத்த நாள்தான் பொன்னியின் செல்வன் வெளியானது. வெளியான முதல் நாளே ரூ 10 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது நானே வருவேன். பொன்னியின் செல்வன் வெளியான பிறகும் நானே வருவேன் படத்துக்கான ரசிகர்கள் வருகை குறையவில்லை. காரணம் […]
பொன்னியின் செல்வன்.. முதல் நாளில் ரூ 80 கோடி வசூல்!
70 ஆண்டுகளுக்கு முன் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பெருங்கதை. மணிரத்னம் இயக்கத்தில் இப்போது திரைப்படமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் நேற்று […]
வசூலில் சாதனை…. ‘விருமன்’ படக் குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு!
கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் ‘விருமன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார். ‘விருமன்’ படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் […]
விமர்சனங்கள விடுங்க… விக்ராந்த் ரோணா வசூல் எவ்வளவு தெரியுமா?
கேஜிஎஃப் 2, சார்லி 777 வரிசையில் விக்ராந்த் ரோனா… இந்த 2022-ல் சொல்லி அடித்த கன்னடப் படங்கள். 4 நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி, அனைத்திந்திய வெற்றிப் பட வரிசையில் 3 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது சுதீப்பின் விக்ராந்த் ரோனா. படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ 35 கோடியை வசூலித்த விக்ராந்த் ரோணா, நான்கு நாட்கள் முடிவில் ரூ 116 கோடியைத் தாண்டியுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படத்துக்கு நல்ல […]
கேஜிஎஃப் 2… இந்திய சினிமாவில் புதிய சாதனை!
ராக்கி பாய் என அழைக்கப்படும் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப் 2. இதன் முதல் பாகம் கேஜிஎஃப் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம், அதைவிட பல மடங்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் நேரடி இந்திப் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது கேஜிஎஃப் 2. வார், தக்ஸ் ஆப் இந்துஸ்தான் போன்ற படங்களின் வசூலையெல்லாம் […]
அண்ணாத்த… தமிழகத்தில் மட்டும் ரூ 150 கோடி வசூல்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் கிராமத்து இளைஞராக, தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணனாக நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான முதல் நாள், முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு எதிரான விமர்சனங்கள், கேலிகள், கிண்டல்கள், எதிர்மறைச் செய்திகளை சிலர் பரப்பி வந்தனர். சமூக வலைத்தளங்களை அதற்காகவே பயன்படுத்தினர். ஆனாலும் படம் இரண்டாவது நாளிலேயே ரூ 100 கோடி வசூலைத் தொட்டது. தொடர்ந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பார்க்க ஆரம்பித்ததால், அண்ணாத்த வசூல் பலரையும் […]
விமர்சனங்களைத் தகர்த்து… ரூ 250 கோடி வசூலை நெருங்கும் ரஜினியின் அண்ணாத்த!
சென்னை: சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிபில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி நாளன்று உலகெங்கும் 2300க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படம் வெளியான நாளிலிருந்து அதிகபட்ச எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் அண்ணன் – தங்கை பாசம், குடும்ப உறவுகளின் மேன்மையைப் பேசிய இந்தப் படத்தை முதல்நாளிலிருந்தே மக்கள் குடும்பம் குடும்பமாகப் பார்க்கத் […]