டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் […]
Category Archives: தமிழ் சினிமா
பாடகர் பம்பா பாக்யா மரணம்!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. ஏ.ஆர்.ரகுமான் இசையில், ‘ராவணன்’ படத்தில் பாடகராக பம்பா பாக்யா அறிமுகமானார். ரஜினிகாந்தின் 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாடியுள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை ஏஆர் ரகுமானுடன் சேர்ந்து பம்பா பாக்யா பாடியுள்ளார். பாக்யராஜ் என்ற இயற்பெயர் கொண்டவரை, […]
குருநாதர் விக்ரமன் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் கேஎஸ் ரவிக்குமார்!
லிஸ்ட் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத் துறையினர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் புது வசந்தம் தொடங்கி புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆர்கே செல்லுலாயிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். […]
நட்சத்திரம் நகர்கிறது ஒரு பார்வை
மேலும் கீழும் பூச்சில்லாமல் சிந்தல், சிதறலின்றி தனது அரசியல் பார்வையை திட்டவட்டமாக முன்வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித், “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் மூலம். காதலே ஓர் அரசியல்தான் என்கிறது படம். “வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்பவர்களை எனக்கு ஆகாது” என்கிறார் கதையின் நாயகி துஷாரா, ஒரு காட்சியில். இன்னொரு காட்சியில் “நீங்கள் கம்யூனிஸ்டா?” என்று அவரிடம் கேட்கப்படுகிறது. தயக்கமோ தாமதமோ இன்றி “நான் ஒரு அம்பேத்காரிஸ்ட்” என்று பதில் வருகிறது. “போர்டிங் ஸ்கூலில்” படித்துவிட்டு […]
கோப்ரா பட விமர்சனம்
நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன் இசை: ஏஆர் ரகுமான் தயாரிப்பு: லலித் குமார் எழுத்து இயக்கம்: அஜய் ஞானமுத்து சிறிய வயதிலேயே சர்வதேச அளவில் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்கிறார் ரோஷன் மேத்யூ. தொழிலை விரிவாக்க ஏகப்பட்ட சட்டவிரோத வேலைகளைச் செய்ய, பல நாடுகளிலும் அவரது தொழில்கள் முடக்கப்படுகின்றன. இதற்குக் காரணமானவர்களை கொல்லத் திட்டமிடுகிறார். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல… ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்ய ராணுவ அதிகாரி… இப்படி எல்லாருமே பெரிய […]
விமர்சனங்களை தாண்டிய வெற்றி… உற்சாகத்தில் ‘லெஜண்ட் சரவணன்’!
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படமாக தயாரித்து, லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான ‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஐந்து வாரங்களைக் கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் மீறிய ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லமால், சமூக சிந்தனையுடன் கூடிய […]
நீண்ட காத்திருப்புக்குப் பின் திரையரங்குகளில் வெளியாகிறது ‘பார்டர்’
இயக்குநர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. அதன்பின்னர் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்ய […]
டைரி பட விமர்சனம்
நடிகர்கள்: அருள்நிதி, கிஷோர், ஜெயப்பிரகாஷ், பவித்ரா மாரிமுத்து ஒளிப்பதிவு: அரவிந்த் சிங் இசை: ரான் ஈத்தன் யோகன் தயாரிப்பு: கதிரேசன் எழுத்து – இயக்கம்: இன்னாசி பாண்டியன் திகில் பட வரிசையில் இன்னொரு வரவாக வந்திருக்கிறது டைரி படம். பயிற்சி முடித்த உதவி ஆய்வாளர்களிடம், ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு கேஸை ஒப்படைக்க உத்தரவிடுகிறார் உயர் அதிகாரி. அதன்படி கண்ணை மூடிக் கொண்டு ஒரு கோப்பை எடுத்துத் தருகிறார் அருள்நிதி. அது 16 ஆண்டுகளுக்கு […]
ஆர்யா கூப்பிட்டா நான் மீண்டும் காமெடியனா நடிக்க தயார்! – சந்தானம்
திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ஷோ பீப்பிள் இணைந்து வழங்கும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் அறிவியல் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சத்யம் திரையரங்கில் நடந்தது. இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் […]
என் இனிய தமிழ் மக்களே…. – மருத்துவமனையிலிருந்து பாரதிராஜா அறிக்கை
என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் […]