சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் – ‘டிரைவர் ஜமுனா’ ஐஸ்வர்யா ராஜேஷ்

எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன்,” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தனது தேர்ந்த நடிப்பால் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் […]

சர்தார் வெற்றி… இயக்குநர் மித்ரனுக்கு சொகுசு கார் பரிசளித்த கார்த்தி!

கார்த்தி நடிப்பில், பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கிய இந்தப் படம் தீபாவளி அன்று வெளியானது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம், இந்திய உளவாளி ஒருவரின் கதை. படத்தின் காட்சியமைப்பு, கார்த்தியின் நடிப்பு, பிரமாண்ட தயாரிப்பு காரணமாக நல்ல வரவேற்பைப் பெற்றது சர்தார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இயக்குநர் மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன்குமார் சுமார் 78 லட்சம் மதிப்புள்ள டொயோட்டடா ஃபார்ச்சூனர் […]

காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியா முழுமைக்குமான திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால், ஒரு வாரம் கழித்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் இப்படத்தை வெளியிட்டனர். மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா தற்போது வெளியான அனைத்து மொழிகளிலுமே வசூல் வேட்டை செய்து வருகிறது. குறிப்பாக தமிழ் மற்றும் இந்தியில் தீபாவளிப் […]

ரஜினி நடிக்கும் இரு புதிய படங்களைத் தயாரிக்கிறது லைகா நிறுவனம்!

சென்னை: இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிகேஎம் தமிழ்க் குமரன். சில நிமிட சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த தமிழ்க் குமரன், “தற்போது ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்துக்குப் பிறகு, லைகா நிறுவனத் தயாரிப்பில் இரண்டு புதிய படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற […]

ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன்தான்! – முன்னனி விநியோகஸ்தர் பேச்சு

சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபாவளியையொட்டி வரும் வெள்ளியன்று இந்தப் படம் திரைக்கு வரும் பிரின்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பிரபல தமிழ் சினிமா விநியோகஸ்தர் அன்புச்செழியன் சிவகார்த்திகேயன் பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பிரின்ஸ் படத்தை தமிழகம் முழுவதும் எங்களது நிறுவனம் மூலமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். […]

கடலூரில் ‘ஜெயிலர்’ சூட்டிங்கில் ரஜினி: நேரில் பார்க்க அலைமோதும் ரசிகர்கள்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் என்ற கிராமத்தின் அருகே நடைபெற்று வருகிறது. புதுவை மாநில […]

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் முதல் தோற்றம்

அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அஜினோமோட்டோ’. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. எம். உதயகுமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எம். எஸ். ஸ்ரீநாத் மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த […]

‘ஐயர்கள் பிரியாணி கடை வைப்பது போலத்தான் இவர்கள் படம் எடுத்திருப்பது!’ – திண்டுக்கல் லியோனி பேச்சு

டிஸிஃப்மா (DeSiFM) திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’. இதில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், பிரேம், ஆர்ஜே பரத், சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆரோ வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபி காரா இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் பாடல்கள் எழுதியுள்ளார். இளையராஜா.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். டிஸிஃப்மா (DeSiFM) சார்பில் […]

ரஜினியைச் சந்தித்த சரத்குமார்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் தனது மகள் வரலட்சுமியுடன், ரஜனியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார்.   இந்த சந்திப்பு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]

‘ஏங்க மணிரத்னம்… இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமான கல்கியை கண்டுக்காம விட்டுட்டீங்களே!’

கல்கியின் பெருங்கதையான பொன்னியின் செல்வன் வெளியானதிலிருந்து திரையுலகம், எழுத்துலகம் இரண்டுமே பரபரத்துக் கிடக்கிறது. இவற்றைத் தாண்டி, படம் பெரும் வசூலைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வனை எழுதிய அமரர் கல்கிக்கு உரிய மரியாதையை மணிரத்னம் செய்யவில்லை என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான கேயார் கூறியுள்ளதாவது: “விக்ரம்’ படத்தை போலவே ‘பொன்னியின் செல்வன்’ படமும் முதல் வாரத்தில் நல்ல லாபத்தைப் பார்த்து வருகிறது. ஆனால் ‘விக்ரம்’ படத்தை விட ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு மிகப்பெரிய […]