ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் – நிதி அகர்வால் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். உலகெங்கும் இந்தப் படம் இன்று (நவம்பர் 18) வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி முதல்வர் முக ஸ்டாலினுக்காக திரையிடப்பட்டது. படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார் முதல்வர். திரைப்படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக கலகத் தலைவன் திரைப்படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் […]
Category Archives: தமிழ் சினிமா
படத்தில் நடனம் இல்லை என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது! – சசிகுமார்
இந்நிலையில் படத்தின் குழுவினர் அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். படத்திலிருந்து பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “இயக்குநர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் […]
லவ் டுடே இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்!
சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் […]
‘இயக்குநர் என்னை ஏன் செலக்ட் பண்ணார் தெரியுமா..?’ – ரகசியத்தை உடைத்த மகிமா
ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து சரவணனுடன் இணைந்து […]
மிரள் பட விமர்சனம்
நடிகர்கள்: பரத், வாணி போஜன் ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா இசை: எஸ்என் பிரசாத் தயாரிப்பு: ஆக்சஸ் பிலிம் பேக்டரி இயக்கம்: எம் சக்திவேல் பொதுவாக பேய்ப் படங்கள் என்றால் இருட்டு வீடு அல்லது பங்களாவுக்குள் வைத்து லாஜிக்கே இல்லாமல் மிரட்டுவார்கள். ஆனால் மாறுதலுக்கு வெளியே கூட்டிப் போய் மிரள வைக்க முயற்சித்திருக்கிறார்கள் மிரள் குழுவினர். பரத் – வாணி போஜன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். பத்து வயதில் ஒரு மகன். வாணிக்கு அடிக்கடி வினோதமான கனவு […]
இயக்குநர்களைக் கலாய்த்த ‘கலகத் தலைவன்’!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் கலையரசன், ஆரவ், நாயகி நிதி அகர்வால், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடலாசிரியர் கார்கி, ஒளிப்பதிவாளர் தில் ராஜு, நடிகர் பாபி சிம்ஹா, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் […]
‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ சந்தானம்!
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மனோஜ் பீதா கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: “தெலுங்கு முன்னணி இயக்குனரான […]
கிராமத்து கதையில் நடிக்க வேண்டும்! – அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களைத் தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் தன்னை நிரூபித்து வரும் அசோக் செல்வன் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பும் கிடைத்து வருகிறது. தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் பத்திரிகை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து… […]
‘கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்.. ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்!’- குருமூர்த்தி விழாவில் ஆர்கே செல்வமணி
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர், இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் […]
புதுமுகங்கள் நடிப்பில் புதிய ரொமான்ஸ் காமெடி படம்!
நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் ஆகியோர் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார்கள். என்என் பிக்சர்ஸ் சார்பில் இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பிவிஆர் மீனா, திவோ தலைமை அதிகாரி விசு ஆகியோருடன், ‘4யு’ கம்பெனி நிறுவனர் ஆர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. பூஜை முடிந்த பிறகு படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து […]