‘கதாநாயகனாக மாறிவிடாதே… கதை நாயகநாகவே இரு!” – சூரிக்கு சசிகுமாரின் அறிவுரை

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் நன்றி அறிவிப்பு விழா நடத்தினர். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கே. […]

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் முதல் தோற்றம்… வெளியிட்டார் உதயநிதி!

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்ற வடிவமைப்பு வெளியாகியுள்ளது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். […]

படத்தில் நடனம் இல்லை என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது! – சசிகுமார்

இந்நிலையில் படத்தின் குழுவினர் அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். படத்திலிருந்து பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “இயக்குநர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் […]

ரஜினி சொன்ன அட்வைஸை கேக்கலை! – சசிகுமார்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ‘ராஜ வம்சம்’ படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் – நடிகர் சசிகுமார் நடிக்க ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் இப்போதைய தலைமுறையில் நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குநர் சுந்தர் சி. அவரிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு. தன் பங்குக்கு இவர் இந்தப் படத்தில் 49 நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் […]