ஆபத்தான ஆரம்பம்!

தமிழ் நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், பணம் , உள்ளூர் செல்வாக்கு போன்றவற்றையும் தாண்டி, தமிழக மக்களின் மன ஓட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க முடிகிறது. சின்னச் சின்ன அதிருப்திகள் இருந்தாலும் -குருமூர்திகளின் அளவீடுகளின்படி – ஆண்மையுள்ள இந்த அரசே தொடரட்டும் என்ற விருப்பம்தான், திமுகவை வரலாறு காணாத வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. முதல்வர் சொன்னதுபோல, பொறுப்பு ஏராளமாகக் கூடியிருக்கிறது. அத்துடன் நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு கவலையும்… அது, கோட்சேவின் வழித்தோன்றல்களான கொலைகாரக் கூட்டம் பாஜகவுக்கு ஆங்காங்கே […]

படத்தை முடிக்க அப்பா பென்சன் பணம் கொடுத்து உதவினார்! – விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘எஃப் ஐ ஆர் (FIR)’. ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, படத்தின் தயாரிப்பாளர், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து […]

எதற்கும் துணிந்தவன்… நாளை முன்னோட்டம்!

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் (பிப்ரவரி 18) மாலை 6 […]

அண்ணன் அழைத்தார்… மகிழ்ச்சியான சந்திப்பு! – 13 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவைச் சந்தித்த கங்கை அமரன்

3இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். கங்கை அமரனை பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக திரையில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப் பூவே.. தான் கங்கை அமரன் எழுதிய முதல் பாடல். அந்தப் பாடல் தொடங்கி, ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை தன் அண்ணன் இசையில் எழுதியுள்ளார் கங்கை அமரன். இவற்றில் பெரும்பாலானவை மெகா ஹிட் பாடல்கள். இளையராஜா தயாரித்த கோழி கூவுது படத்தில் இயக்குநராக அறிமுகமான […]

ரஜினி நடித்த அதிக இந்திப் படங்களுக்கு இசையமைத்தவர் பப்பி லஹிரி!

சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தியில் நடித்த அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் பப்பி லஹிரிதான். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் இந்தியில் நடித்த மொத்த படங்கள் 28. இவற்றில் சரி பாதி, அதாவது 14 படங்களுக்கு இசை பப்பி லஹிரிதான். அந்தப் படங்களின் பட்டியல்… ஜீத் ஹமாரி, மேரி அதாலத், கங்குவா, மகாகுரு, வாஃபாதார், கிராஃதார், பேவாஃபா, தமாச்சா, கைர் கனூனி, ஃபரிஷ்டே, பூல் பனே அங்காரே, தியாகி, இன்சானியாத் கி […]

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்!

டெல்லி: இந்தியாவில் 80 மற்றும் 90-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் இருந்த லஹிரி நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நள்ளிரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பை கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி […]

என்றும் என்றென்றும்!

ரஜினிகாந்த் – இளையராஜா… இந்த இருவரின் திரைப்பயணமும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் தொடங்கியது. ஒரு ஆண்டு முன்னே பின்னே. இருவருமே அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை திரையுலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்கிறார்கள். விரைவில் திரைத்துறையில் பொன்விழா காணவிருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த நூற்றுக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ரஜினி – இளையராஜா கூட்டணியில் உருவான 99.99 சதவீத படங்களில் பாடல்கள் பெரும் வெற்றிப் பெற்றிருக்கின்றன. ஆனால் வீரா படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் இளையராஜாவும் ரஜினியும் இணையவே இல்லை. […]

இறைவன் மிகப் பெரியவன்!

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘இறைவன் மிகப்பெரியவன்’. ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியதாவது: “இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் […]

தலைவர் 169! #Rajinikanth

எந்திரன், பேட்ட, அண்ணாத்தே படங்களைத் தொடர்ந்து, மீண்டும் ரஜினியை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியின் 169-வது திரைப்படமான இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பை நேற்று மாலை […]

ரஜினி – வெற்றிமாறன் – இளையராஜா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்? Exclusive

சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற மிகப் பெரிய வெற்றிப்படத்தை 2021ல் கொடுத்தார் ரஜினிகாந்த். சமூக வலைதள விமர்சனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது அந்தப் படம். ரஜினியின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்குவார் என்று கூறப்பட்டுவந்தது. அதே சன் பிக்சடர்ஸ் தயாரிக்கக் கூடும் என்றும் பேசப்பட்டது. ரஜினியை அடுத்து இயக்கப் போகும் இயக்குநர்கள் என்ற பட்டியலில் இடம்பெறாத முன்னணி இயக்குநர்களே இல்லை என்ற அளவுக்கு தினமும் ஒரு இயக்குநர், தயாரிப்பாளர் […]