முதல் முறையாக ஐரோப்பாவில் 28 நாடுகளில் வெளியாகும் கேஜிஎஃப் 2!

  ஐரோப்பா கண்டத்தில் 28க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2. யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் கேஜிஎஃப் 2, வெளயீட்டுக்கு முன்பே பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இதுவரை தமிழ், கன்னடப் படங்கள் வெளியாகாத நாடுகளில் கூட முதல் முறைாக கேஜிஎஃப் 2 […]

22 ஆண்டுகளுக்கு முன்பு ‘நாடு கடத்தப்பட்டவர்’ இன்று பாகிஸ்தான் பிரதமராக தேர்வு!

இஸ்லாமாபாத்: கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தேசிய அவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கானுக்குப் பதிலாக எதிர்கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் ஷெரீப் இப்போது நாட்டின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார். ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமர் பதவிக்காக எதிர்கட்சிகள் முன்மொழிந்த கூட்டு வேட்பாளர் ஆவார். இன்று ஏப்ரல் 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகலில் பாகிஸ்தான் தேசிய அவையான அதன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டபடி அவர் பெரும்பான்மை வாக்குகளைப் […]

முடிவுக்கு வருகிறதா சசிகலா அரசியல்?

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். சில தினங்களில் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்கக் காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு […]

‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ

சென்னை: இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணித்தே தீர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, […]

‘ இதற்கு மேலும் ‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?’ – கவிஞர் வைரமுத்து

சென்னை: நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின்  37-வது கூட்டத்தின் போது அதன் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா இந்தி மொழியை வளர்ப்பது குறித்து விளக்கினார். இது தொடர்பாக பேசிய அவர், “நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள் உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற […]

‘ ஆங்கிலத்துக்கு பதில் இந்தி?… ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் செயல்’! – அமித் ஷாவுக்கு முக ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில், அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் இப்படி பதிவிட்டுள்ளார்: ‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று […]

பகிரங்க மன்னிப்புக் கோரினார் எஸ்வி சேகர்!

சென்னை: நடிகர் எஸ்வி சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ‘முகநூல்’ பக்கத்தில் அவதூறு தகவல் பதிவிட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், அமெரிக்கவாழ் தமிழர் முகநூலில் பதிவிட்டிருந்த கருத்தையே பகிர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு எஸ்வி சேகர் […]

தமிழ்த் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள்… மொழிக்கு உரிய மரியாதை தரவேண்டும்! – கேஜிஎஃப் நாயகன் யஷ்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, […]

வர்ண, வர்க்க பேதங்களைப் பேச வரும் வாய்தா!

வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். ஜே. சேது முருகவேல் அங்காரகன் […]

முதல் முறையாக ஒரிஜினல் கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள தமிழ்ப் படம்!

இந்தப்படத்தை நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ளார். கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். பிரபுஜித் படத்தை இயக்கியிருக்கும் நாகராஜ் பாய் துரைலிங்கம், கலாபிரபு தொடங்கி விக்னேஷ் சிவன், ஹெச். வினோத் வரை பல இயக்குநர்களிடம் பல்வேறுபட்ட படங்களில் துணை, உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். இதில் கதாநாயகனாக பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரபுஜித், ஒரு நடிகராக ஏற்கெனவே சுட்டுப் பிடிக்க உத்தரவு ,ஜகமே தந்திரம், பேட்ட போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர் தன் பள்ளி, […]