விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த […]
Author Archives: Dhina Cheithi
நயன்தாரா நடிப்பில் O2: வெளியானது புதிய பட முன்னோட்டம்
தமிழில் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம் ‘O2’ திரைப்படத்தை ஜூன் 17 அன்று வெளியிடுகிறது. இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்கே படத்தொகுப்பாளராக […]
தலைவர் 169… அப்போ அதெல்லாம் நிசந்தானா!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், திரைக்கதைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை இயக்குபவர் நெல்சன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பீஸ்ட். படத்துக்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனம் காரணமாக படம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்காது என்றும், வேறு இயக்குநர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், ரஜினியே நெல்சனை வீட்டுக்கு அழைத்து தைரியம் சொல்லி அனுப்பியது நடந்தது. […]
காபி வித் காதல்: காலத்துக்கேற்ப கலர் மாறும் சுந்தர் சி!
காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குநர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும் என்றால் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இயக்குனர் சுந்தர்.சியின் படங்கள்தான். முழுநீள நகைச்சுவைப் படங்கள் என்றாலும் சரி, திகில் படங்கள் என்றாலும் சரி அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரையரங்குகளுக்கு அழைத்து வரக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைந்திருக்கும்.. அந்த வகையில் அரண்மனை-3 படத்திற்கு […]
‘மாயோன்’ திரைப்பட முன்னோட்ட ரத யாத்திரை மற்றும் சிறப்பு டிரெய்லர் வெளியீடு
டபுள் மீனிங் புரடொக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, என் கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் மாயோன். புத்தம் புதிய களத்தில் கடவுள், அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, மாயோன் படத்தின் முன்னோட்டப் படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு தனியார் கல்லூரியில், படத்தின் விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் விஷ்ணு சிலை […]
பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் மரணம்!
கொல்கத்தா: பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தியத் திரையுலகின் பல்மொழிப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் […]
டி ராஜேந்தருக்கு என்னாச்சு?
சென்னை: தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாகத் திகழ்ந்த டி ராஜேந்தர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போரூர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறார். மேலோட்டமான செய்தி இவ்வளவுதான். உண்மையில் டி ராஜேந்தருக்கு என்ன நோய்… அவரது உடல் நிலை, சுய நினைவு எந்த அளவுக்கு உள்ளது? டி ராஜேந்தருக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு […]
இளையராஜா இசை ஒத்திகை… நேரில் ரசித்து மகிழ்ந்த சூப்பர் ஸ்டார்!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சந்தித்துப் பேசினார். இருவரும் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தனர். பேசி முடித்ததும் அங்கிருந்து புறப்பட இளையராஜா தயாராகியுள்ளார். அப்போது, “சாமி, இப்போ எங்கு செல்கிறீர்கள்?” என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். தனது இசைப் பதிவுக் கூடத்தில் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற உள்ளதாக இளையராஜா கூறியுள்ளார். அப்போது தானும் உடன் வருவதாக தெரிவித்த ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை ஒத்திகை நடக்கும் இசைக் […]
டெக்சாஸ் பள்ளியில் துப்பாாக்கிச் சூடு… 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி!
உவால்டே: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பள்ளியின் ஆசிரியரும் ஒருவர். சான் அன்டோனியோ நகருக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் 18 வயதுடைய ஒரு நபர் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவில்லை. தாக்குதல் நடத்திய நபர் பக்கத்தில் உள்ள பள்ளியில் […]
மன்னிக்கக் கற்றுத் தந்தவர் என் தந்தை!- ராகுல் காந்தி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியில் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராஜீவ் காந்தி குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்ட ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது கொள்கைகள் நவீன இந்தியா வடிவமைத்தன. அவர் கருணை மிக்க மனிதர். எனக்கும், பிரியங்காவுக்கும் […]