சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2002-ல் வெளியான பாபா படம், மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்துக்கு சமீப காலமாக, சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு மிகவும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12.12.2022 அன்று ஒரே ஒரு காட்சியாகத் திரையிடத்தான் முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினைக் கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடத் தயாராகி வருகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்துக்கு DI, மிக்ஸிங், கிராபிக்ஸ் என அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை தான் முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா? என்பதனை அவர் பார்வையிட உள்ளார்.

இந்தப் படத்துக்காக சில புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் நீக்கப்பட்டு, வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய மற்றும் மாற்றப்பட்ட காட்சிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று டப்பிங் பேசி முடித்தார்.

சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் பாபாவின் மறுவெளியீட்டுக்கான ஹைப் மற்றும் ‘அற்புதமான வரவேற்பினை கண்டு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.

விரைவில் பாபா படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகவிருக்கிறது. 

தொழில்நுட்பக் குழு

ஒளிப்பதிவாளர் : சோட்டா கே நாயுடு
தொகுப்பாளர்: விடி விஜயன்
கலை இயக்குனர்: ஜிகே
சண்டை பயிற்சி: ஃபெப்சி விஜயன்
வரிகள்: கவிஞர் வாலி, வைரமுத்து
வசனம்: எஸ் ராமகிருஷ்ணன்
கதை, திரைக்கதை, தயாரிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *