ஏஆர் ரகுமான் இயக்கிய படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி!

  சென்னை: ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்படங்களை இயக்குவதிலும் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார். முன்னதாக ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் ‘லி மஸ்க்’ என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், மெய்நிகர் உண்மை என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மெய்நிகர் உண்மை மூலம் […]

பொன்னியின் செல்வன்: வெளியானது இரண்டாவது பாடல்!

சென்னை: கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாகி வரும்இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் […]