சென்னை: தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சிராபள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் வீரபாண்டியில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு அரப்பிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *