வட கொரியா… வெளிநாட்டுப் படம் – சீரியல் பார்த்தால் மரண தண்டனை!

பியாங்யாங்: அமெரிக்கா, தென் கொரியா போன்ற வெளிநாடுகளின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வேலையின் ஒரு பகுதியாக கடுமையான புதிய சட்டம் ஒன்றை வடகொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை அணிந்தாலோ, அவற்றின் மொழி வழக்கைப் பயன்படுத்தினாலோ அதிகபட்சம் மரண தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளது கின் ஜோங் உன் அரசு. கிம் ஜோங் உன்னின் புதிய உத்தரவின்படி, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் […]

அதிவேகமாகப் பரவும் புதிய கொரோனா வைரஸ்…. பிரிட்டிஷ் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை!

லண்டன்: கொரோனா தாக்கம் குறைந்த பிறகு இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இப்போது இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துவிட்டதால், பண்டிகை காலத்தில் […]

நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமிக்கு வந்தது சீன விண்கலம்!

பீஜிங்: நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 24-ந்தேதி சீனா ஒரு விண்கலம் அனுப்பியது. ‘சேஞ்ச்-5’ என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் 1-ந்தேதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்துக் கொண்டு. கடந்த 3-ந்தேதி நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது நிலவை சுற்றிக் கொண்டிருந்த ராக்கெட் விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த […]

மாவீரர் நாள் நிகழ்ச்சிகளுக்குத் தடை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம்: இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினத்தை தடை செய்யக் கோரி இலங்கை போலீஸ் மனு தாக்கல் செய்ததை அடுத்து மன்னார் நீதிமன்றம் மாவீரர் தினத்தை நினைவுகூர்வதற்கு மன்னார் மாவட்டம் முழுவதும் தடை விதித்துள்ளது. மாவீரர் தின நினைவுகூரல்களை தடை செய்யக் கோரி மன்னார் காவல்துறை மனு தாக்கல் செய்ததையடுத்து, 2020 நவம்பர் 21 முதல் 27 ஆம் தேதி வரை மன்னாரில் மாவீரர் தின நினைவுகூரல் நிகழ்சிகளை தடை செய்து மன்னார் நீதிமன்றம் […]

தெற்கு ஆஸ்திரேலியாவை முடக்கிய ஒரு பொய்!

அடிலெய்ட்: தெற்கு ஆஸ்திரேலியாவில், ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களிடமிருந்து புதிய கொரோனா தொற்று பரவுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்தப் பரவலைத் தடுக்க ஆறு நாள்கள் கடுமையான ஊரடங்கை அறிவித்தது தெற்கு ஆஸ்திரேலியா அரசு. `ஒரு நாளைக்கு, ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டுமே வெளியே வர வேண்டும். சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, பொது இடத்தில் உடற்பயிற்சி செய்வது, திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. வணிக நிறுவனங்கள், வணிக மையங்களெல்லாம் மூடப்பட்டன. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது. […]

பாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட் மாவட்டத்தில் 1300 ஆண்டுக்கால பழமையான விஷ்ணு கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியின்போது இந்த கோவில் கண்டறியப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இந்த கோயிலுக்கு அருகில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் வருகையில் சுத்தப்படுத்திக்கொள்ள அவை அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஸ்வாட் மாவட்டத்தில் ஆயிரமாண்டு பழமையான பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா தொல்லியல் […]

ஒருவழியாக ஒப்புக் கொண்டார் ட்ரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வந்தார். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யவதற்கு டொனால்ட் ட்ரம்ப் சம்மதித்து இருக்கிறார். அதே நேரம் […]

உலகம் முழுவதும் ஒரே நாளில் 5.80 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

ஜெனீவா: சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,89,70,525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,07,59,532 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 93 ஆயிரத்து 227 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் […]

‘தோல்வியை ஏத்துக்கங்க மிஸ்டர் ட்ரம்ப்’! – குடியரசுக் கட்சியினர் வற்புறுத்தல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். இந்தத் தேர்தலில் மோசடி நடந்துவிட்டதாக தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிபர் டிரம்ப் தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். பல குடியரசுக் கட்சியினர் சட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளனர், ஆனால் டிரம்ப்பின் இந்த முடிவு கட்சிக்குள் ஒரு […]

95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து…. அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அவற்றில் ரஷ்யா முதல் முறையாக கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து, அதைப் பயன்பாட்டுக்கும் விட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது மாடர்னா நிறுவனம் தனது புதிய தடுப்பு மருந்தினை அறிவித்துள்ளது. இது தங்களுக்கு `சிறந்த ஒரு […]