யாழ்ப்பாணம்: இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினத்தை தடை செய்யக் கோரி இலங்கை போலீஸ் மனு தாக்கல் செய்ததை அடுத்து மன்னார் நீதிமன்றம் மாவீரர் தினத்தை நினைவுகூர்வதற்கு மன்னார் மாவட்டம் முழுவதும் தடை விதித்துள்ளது.

மாவீரர் தின நினைவுகூரல்களை தடை செய்யக் கோரி மன்னார் காவல்துறை மனு தாக்கல் செய்ததையடுத்து, 2020 நவம்பர் 21 முதல் 27 ஆம் தேதி வரை மன்னாரில் மாவீரர் தின நினைவுகூரல் நிகழ்சிகளை தடை செய்து மன்னார் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

“அனைத்து தரப்ப்பு பொது மக்களும் மாவீரர் நாள் நினைவுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இலங்கை போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *