இந்தி படிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை… திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள்! – விஜய் சேதுபதி அதிரடி

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இத்திரைப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இப்படத்தில் தானே இந்தியில் டப்பிங்கும் பேசியுள்ளார். படம் வெளியாவதையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப் உள்ளிட்ட […]

‘இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியாவை மாற்றிவிட வேண்டாம்!’ – வைகோ

சென்னை: இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணித்தே தீர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, […]

‘ இதற்கு மேலும் ‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?’ – கவிஞர் வைரமுத்து

சென்னை: நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின்  37-வது கூட்டத்தின் போது அதன் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா இந்தி மொழியை வளர்ப்பது குறித்து விளக்கினார். இது தொடர்பாக பேசிய அவர், “நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள் உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற […]