வான் மூன்று பட விமர்சனம்

தற்கொலைக்கு முயலும் சுஜித் குமார் (ஆதித்யா பாஸ்கர்), அந்த முயற்சியில் தோற்று உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில்  சேர்க்கப்படுகிறார். அதே மருத்துவமனையில் சுவாதியும் (அம்மு அபிராமி) சேர்க்கப்படுகிறார. அதே காரணம்தான். இருவரும் அவரவர் வாழ்வில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தற்செயலாக நடந்த இவர்களின் சந்திப்பின் அடுத்தடுத்த நிகழ்வுகள் என்ன என்பது ஒரு கதை.  அடுத்தடுத்து எத்தகைய நிகழ்வுகளுக்கு எடுத்துச் செல்கிறது என்பது ஒரு கதை. அடுத்து, திருமணம் […]

ராயர் பரம்பரை பட விமர்சனம்

நடிகர்கள்: கிருஷ்ணா, சரண்யா, ராஜேந்திரன், ஆனந்தராஜ் ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு இசை: கணேஷ் ராகவேந்திரா இயக்கம்: ராம்நாத்   வேட்டைக்காரன்புதூரின் பெரிய மனிதர் ராயருக்கு காதல் என்றாலே பெரும் வெறுப்பு. காரணம் பல ஆண்டுகளுக்கு முன் அவரது தங்கை காதல் வயப்பட்டு ஒருவருடன் ஊரைவிட்டே ஓடிவிடுகிறார். ஊரில் காதலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் அளவுக்குப் போகிறது அவரது சண்டியர்தனம். அவருக்கு ஒரே மகள். இசைக் கல்லூரியில் பட்டம் படித்துவிட்டு ஊருக்கு வருகிறார். அதே […]

மாமன்னன் – ஒரு பார்வை

  முந்தைய இரண்டு படங்களுடன் (பரியேறும் பெருமாள், கர்ணன்) ஒப்பிடுகையில், படைப்பாக்க நேர்த்தியில் சிதறல்கள் நிறைய. எனினும், அரசியல் களத்தில், அதிகம் பேசப்படாத அல்லது குறைவாகப் பேசப்பட்ட அல்லது பேசுவது போல பேசப்படாமல் விடப்பட்ட ஒரு முக்கியப் புள்ளியை ‘மாமன்னன்’ உரக்கப் பேசுகிறது. ஜனநாயக அரசியலில், எல்லோருக்குமான – கண்ணியமான பங்கேற்பின் நியாயத்தை, விரிந்த பரப்பில் வலுப்படுத்த தீவிரமாக உழைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். பகத் பாசில் எப்போதும் அருமையாக நடிக்க வல்லவர். வடிவேலுவுக்குள் புதைந்திருந்த இன்னொரு […]

அஸ்வின்ஸ் பட விமர்சனம்

நடிகர்கள்: வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ் மேனன், முரளிதரன், உதயாதீப் ஒளிப்பதிவு: எட்வின் சகாய் இசை: விஜய் சித்தார்த் இயக்கம்: தருண் தேஜா ஹாலிவுட் பாணியில் ஒரு திகில் படத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறது புதிய இளைஞர் குழு. அதில் வெற்றி பெற்றிருக்கிறார்களா? வாங்க பார்க்கலாம்! லண்டனில் ஒரு வினோதமான தீவில் ஒரு ஆடம்பர மாளிகை. அதில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் விமலா ராமன், அங்கிருந்த 15 பணியாளர்களைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், […]

செங்களம் (இணையத் தொடர்) விமர்சனம்

நடிகர்கள்: கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ், விஜி சந்திரசேகர் இசை – தரண்குமார் தயாரிப்பு – அபி அன்ட் அபி என்டர்டெயின்மென்ட் இயக்கம் – எஸ்ஆர் பிரபாகரன் வெளியீடு: ஜீ5 சுந்தரபாண்டியன் பட புகழ் எஸ்ஆர் பிரபாகரன் முதல் முறையாகக இயக்கியிருக்கும் இணையத் தொடர் செங்களம். சற்று மெதுவாக ஆரம்பித்து பரபர அரசியல் த்ரில்லராக முடிகிறது இந்தத் தொடர். கதை இதுதான். விருதுநகர் நகராட்சியின் தலைவர் பதவியை 40 ஆண்டுகளாக தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது […]

பருந்தாகுது ஊர்க்குருவி பட விமர்சனம்

நடிகர்கள்: விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்ரி இசை: ரஞ்சித் உன்னி தயாரிப்பு: லைட்ஸ் ஆன் மீடியா இயக்கம்: தனபாலன் கோவிந்தராஜ் ஒரு அரை மணி நேர குறும்படத்தை 2 மணி நேர பெரும்படமாக எடுத்திருக்கிறார்கள். உயிருக்குப் போராடும் ஒருவரைக் காப்பாற்ற அவருடன் காடு முழுக்க ஓடிக் கொண்டே இருக்கிறார் நாயகன். இதுதான் ஒருவரிக் கதை. நிஷாந்த் ரூசோ ஒரு சின்ன குற்றவாளி. காட்டில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் வருகிறது. உடனே ரூசோவைக் […]

கடைசி காதல் கதை பட விமர்சனம்

  நடிகர்கள்: ஆகாஷ் பிரேம்குமார், ஈனாக்சி கங்குலி, புகழ், சாம்ஸ், மைம் கோபி ஒளிப்பதிவு: சிவசுந்தர் இசை: சேத்தன் கிருஷ்ணா தயாரிப்பு: ஈ மோகன் இயக்கம்: ஆர்கே வித்யாதரன் காதலில் தோல்வி அடையும் ஒரு இளைஞன் மனம் பேதலித்துப் போக, மருத்துவமனையில் சிகிச்சைத் தருகிறார்கள். மருத்துவமனையிலிருந்து வெளியில் வரும் அவர், காதல் தோல்வி துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்ன? என யோசிக்கிறார். அதற்கு ஒரு பதிலையும் அவர் கண்டுபிடித்து அதனைச் செயல்படுத்த முனைகிறார். அவரது அந்தப் புதிய […]

டிரைவர் ஜமுனா பட விமர்சனம்

நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், மணிகண்டா, ஆடுகளம் நரேன் ஒளிப்பதிவு: கோகுல் பெனோய் இசை: ஜிப்ரான் தயாரிப்பு: எஸ்பி சௌத்ரி இயக்கம்: கின்ஸ்லி ஒரு கொடூரக் கொலையில் தந்தையை இழக்கும் ஐஸ்வர்யா, அவர் ஓட்டி வந்த கால் டாக்சியை வேலையைக் கையில் எடுக்கிறார், வாழ்க்கையை ஓட்ட. உடனிருக்கும் தம்பி வீட்டை அடகுவைத்துவிட்டு எங்கோ ஓடிவிட, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயைப் பார்த்துக் கொண்டு போராட்ட வாழ்க்கை. இந்த சூழலில் ஒருநாள் அரசியல்வாதி ஆடுகளம் நரேனைக் கொலை செய்யும் நோக்கில் ஒரு […]

என்ஜாய் பட விமர்சனம்

  நடிகர்கள்: மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஸ்குமார், நிரஞ்சனா, ஜீ,வி அபர்ணா, சாய் தன்யா, ஹாசின், சாருமிசா ஒளிப்பதிவு: கேஎன் அக்பர் இசை – கேஎம் ரயான் பின்னணி இசை- சபேஷ்- முரளி. தயாரிப்பு: எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன் எடிட்டர்: மணி குமரன். எழுத்து – இயக்கம்: பெருமாள் காசி ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் […]

‘செஞ்சி’ பட விமர்சனம்

நடிகர்கள்: கணேஷ் சந்திரசேகர், கெசன்யா (ரஷ்யா) இசை: வீ முத்து கணேஷ் தயாரிப்பு – இயக்கம்: கணேஷ் சந்திரசேகர் ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது செஞ்சி திரைப்படம். பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள். அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அங்கே ஏதோ […]