‘₹.2000’… ஒரு பார்வை!

‘₹.2000’ இந்த தலைப்பில் நேற்று ஒரு படம் பார்த்தேன். படத்தின் புகைப்படங்கள், விளம்பரங்கள், அதில் நடித்திருப்பவர்கள் இவற்றை வைத்து சரியான உப்புமா படம் என்கிற மனநிலையோடுதான் படத்திற்கு சென்றேன். ஆனால் அந்த நினைப்பை படம் ஓடத் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே மாற்ற வேண்டியதாகி விட்டது. நாட்டுக்கு வாய்த்த நல்லவர் நரேந்திரமோடி திடீரென ரூபாய் நோட்டு மதிப்பிழப்பை கொண்டு வந்து விட்டு, கலர், கலராய் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த நேரம்… அந்த நோட்டு சாயம் போகுமோ […]

ஆறாம் நிலம் – ஒரு பார்வை

ஈழத்தின் பிற்போர்கால வாழ்வின் ஒரு பகுதியை அப்படியே பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட பெருநிலத்தில் அவற்றை அகற்றும் பணியினைச் செய்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஒரு அமைப்பின் கீழ் செயல்படும் அக்குழுவின் செயல்பாடுகளை வைத்துத் துவங்கும் இக்கதை மெல்ல மெல்ல இலங்கை யுத்தத்தின் பாதிப்புகளை எல்லா கோணத்திலும் பேச முயன்றிருக்கிறது. கதையும் களமும் அதில் நடித்திருக்கும் பெரும்பாலன மனிதர்களும் போரின் வடுக்களைச் சுமந்தவர்கள். மலைமகள் பாத்திரமும் அந்த குழந்தையும் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. மன்மதன் […]

‘லாபம்’ பார்க்கலாம்!

பொருளாதார அதிகாரமே அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்ற நவீன கார்ப்பரேட் உலகமயச் சூழலில் ‘தொழிலாளர் ஒற்றுமை’ எனும் கம்யூனிச அரிவாளை தனது திரைப்படைப்பில் கூர் தீட்டி தந்து விட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். தோழர் பி.எஸ்.ஆர் (பி.சீனிவாசராவ்) பெயரிலான சங்கம், கூட்டுப் பண்ணை விவசாயம், தலித் மக்களுக்கான நில உரிமை என 1970களுக்கு முந்தைய கீழத்தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட்டுகளின் முன்னெடுப்புகளை இன்றைய சூழலுக்கேற்ப முன்மொழிகிறது ‘லாபம்”. தென்பரையில் தோழர் பி.எஸ்.ஆர் கட்டமைத்த விவசாயிகள் சங்கத்திற்கும் வெண்மணியில் ஒரே குடிசைக்குள் […]

கர்ணன் – ஒரு பார்வை

அநீதியால் ஒடுக்கப்பட்ட மனிதக் கூட்டத்தின் கால்களில் கட்டப்பட்டுள்ள விலங்கினை உடைத்தெறிவதின் பின்னால் உள்ள தடைகள், வலி, வெறுப்பு, அழுத்தம், தேவை, யாவற்றுக்குமான நீதியையும் பேசுகிற படம். கலையம்சக் கோட்பாடுகளை மீறி, ரத்தமும் சதையுமான மக்களின் இயல்பான வாழ்வைத் தன் நாட்டாரியல் அறிவுடன் பிரதிபலிக்க முயற்சிக்கிற மாரிசெல்வராஜின் திரைமொழி வியக்க வைக்கிறது. சிலர், அசுரன்- பரியேறும் பெருமாள் படங்களோடு கர்ணனை ஒப்பீடு செய்து பேசும்போது, அவர்களைத் தாண்டி வந்துவிடுகிறேன். காரணம், ஒரு தீவிரமான காலகட்டத்தைத் தன் இளம்பிராயத்தில் கடந்துவந்தவன் […]

சூரரைப் போற்று – விமர்சனம்

நடிகர்கள்: சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், மோகன் பாபு ஒளிப்பதிவு: நிகேத் பொம்மிரெட்டி இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: 2டிஎன்டர்டெயின்மென்ட் இயக்கம்: சுதா கொங்கரா பணக்காரர்களுக்கு மட்டுமே வசப்பட்டுக் கொண்டிருந்த விமானப் பயணத்தை. சாமானிய மக்களுக்கும் சாத்தியமாக்கிக் காட்டிய ஒரு சாதனையாளரின் உண்மைக் கதைதான் சூரரைப் போற்று. கொஞ்சம் பிசகினாலும் வெறும் டாகுமென்டரியாகப் போயிருக்கும் வாய்ப்புள்ள ஒரு கதையை, சுவாரஸ்ய சினிமாவாக்கி ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. ரயில்கள் கூட நிற்காமல் செல்லும் சோழவந்தான் […]

க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம் இசை: ஜிப்ரான் இயக்கம்: பெ விருமாண்டி படத்தின் சிறப்பு ஆரம்பித்த சில நிமிடத்திலேயே வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற கதாநாயகன் இறந்துவிட்டதாய் நாயகிக்கு செய்தி வருகிறது. பிறகு நாயகன் நாயகி காதல் கதையின் ஃப்ளாஷ்பேக்குகள் வருவதால் காதல் காட்சிகளின் பலம் இன்னும் நமக்குக் கூடித் தெரிகிறது.. அதன் பிறகு அந்த இறந்த கணவனின் உடலைத் திரும்ப வாங்குவதில் ஆரம்பிக்கிறது சிக்கல். அதன் பிறகு இறந்தவர் குடும்பத்தில் படிப்பறிவு […]