சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பல சிக்கல்களைகத் தாண்டி படம் நேற்று முன்தினம் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் சிம்புவிக்கு இது தரமான மறுவரவு படம் என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு […]
Category Archives: தமிழ் சினிமா
மாநாடு எப்படி இருக்கு? #Maanaadu
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம். ஆரம்பமே பிரச்சினைதான். சிம்புதான் அசாதாராண தாமதங்களால் படத்தையே கைவிடுவதாக அறிக்கை விட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் பின்னர் சிம்பு தாமாகவே முன்வந்து சமாதானக் கொடி காட்ட, படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் இடையில் இரு கொரோனா காலகட்டங்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று மாநாடு. தயாரிப்பாளர் அசரவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபுவும் அசாதாரணமாக உழைப்பைக் கொட்டி இந்தப் படத்தை முடித்துக் கொடுத்தார். அடுத்து பட ரிலீஸ் சிக்கல். அதைத்தான் கடந்த […]
பிரச்சினைகள் தீர்ந்து, ஒருவழியாக வெளியானது மாநாடு!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. நிதிப் பிரச்சினை காரணமாக பட வெளியீட்டுக்கு பல முட்டுக் கட்டைகள் விழுந்தன. இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து […]
மீண்டும் தள்ளிப் போனது மாநாடு…. இதுதான் காரணமா?
சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த மாநாடு படம், தீபாவளி க்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் ரஜினியின் அண்ணாத்த படமும் அன்றே வெளியானதால், படத்தை நவம்பர் 25க்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். படத்தின் பாடல்கள் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்திய சுரேஷ் காமாட்சி, நவம்பர் 25ம் தேதி படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். உலக அளவில் 600க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் அதிக […]
அண்ணாத்த… தமிழகத்தில் மட்டும் ரூ 150 கோடி வசூல்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் கிராமத்து இளைஞராக, தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணனாக நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான முதல் நாள், முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு எதிரான விமர்சனங்கள், கேலிகள், கிண்டல்கள், எதிர்மறைச் செய்திகளை சிலர் பரப்பி வந்தனர். சமூக வலைத்தளங்களை அதற்காகவே பயன்படுத்தினர். ஆனாலும் படம் இரண்டாவது நாளிலேயே ரூ 100 கோடி வசூலைத் தொட்டது. தொடர்ந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பார்க்க ஆரம்பித்ததால், அண்ணாத்த வசூல் பலரையும் […]
மாநாடு…. அமெரிக்காவில் 200க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகும் முதல் சிம்பு படம்!
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் மாநாடு திரைப்படம் உலகம் முழுக்க நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் சிம்பு படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அமெரிக்கா முழுவதும் கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அமெரிக்க திரையரங்குகள் பட்டியல்:
‘இப்படி செஞ்சா ஒருத்தர்கூட தியேட்டர் பக்கமே வரமாட்டங்க முதல்வரே!’ – மாநாடு தயாரிப்பாளர்
சென்னை: மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. ஐம்பது விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் […]
கலைப்புலி தாணு பிரமாண்டமாய் வெளியிடும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’!
பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் காலாபானி. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான். இளையராஜா இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், மீண்டும் மோகன்லாலும், பிரபுவும் மலையாளப் படமான ‘மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் இணைந்து […]
ரஜினி சொன்ன அட்வைஸை கேக்கலை! – சசிகுமார்
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ‘ராஜ வம்சம்’ படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் – நடிகர் சசிகுமார் நடிக்க ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் இப்போதைய தலைமுறையில் நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குநர் சுந்தர் சி. அவரிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு. தன் பங்குக்கு இவர் இந்தப் படத்தில் 49 நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் […]
அமீருக்குப் போட்டியாக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்! – எஸ் ஏ சந்திரசேகர்
இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி […]