மாநாடு எப்படி இருக்கு? #Maanaadu

1

 

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம். ஆரம்பமே பிரச்சினைதான். சிம்புதான் அசாதாராண தாமதங்களால் படத்தையே கைவிடுவதாக அறிக்கை விட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் பின்னர் சிம்பு தாமாகவே முன்வந்து சமாதானக் கொடி காட்ட, படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் இடையில் இரு கொரோனா காலகட்டங்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று மாநாடு. தயாரிப்பாளர் அசரவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபுவும் அசாதாரணமாக உழைப்பைக் கொட்டி இந்தப் படத்தை முடித்துக் கொடுத்தார்.

அடுத்து பட ரிலீஸ் சிக்கல். அதைத்தான் கடந்த இரு தினங்களாக செய்திகளாகப் பார்த்துப் படித்திருப்பீர்கள். எல்லா சிக்கல்களையும் தாண்டி படம் இன்று காலை வெளியாகிவிட்டது.

சரி, படம் எப்படி இருக்கிறது?

பார்த்தவர்கள் அத்தனை பேரும் – உண்மைதான், அத்தனைப் பேரும் – ஒருமித்துச் சொல்வது, “படம் வேற லெவல்,,, பிரமாதமான திரைக்கதை… நல்ல பொழுதுபோக்குப் படம்…” என்றுதான். சமூக வலைத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஹூட் என அனைத்திலும் மாநாடுக்கு நேர்மறை விமர்சனங்கள், புகழாரங்கள் குவிந்து வருகிறது.

சக திரைக்கலைஞர்கள் பலரும் மாநாடு படத்தைப் பாராட்டி பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் படத்துக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சில விமர்சனங்கள்