சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் கிராமத்து இளைஞராக, தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணனாக நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளியான முதல் நாள், முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு எதிரான விமர்சனங்கள், கேலிகள், கிண்டல்கள், எதிர்மறைச் செய்திகளை சிலர் பரப்பி வந்தனர். சமூக வலைத்தளங்களை அதற்காகவே பயன்படுத்தினர்.

ஆனாலும் படம் இரண்டாவது நாளிலேயே ரூ 100 கோடி வசூலைத் தொட்டது. தொடர்ந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பார்க்க ஆரம்பித்ததால், அண்ணாத்த வசூல் பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது.

இந்த நிலையில் படம் வெளியான 20 நாளில் இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ 150 கோடி வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் தமிழகத்தை மழை வெள்ளம் புரட்டிப் போட்ட நிலையிலும் அண்ணாத்த வசூலில் சாதனைப் படைத்துள்ளது.

தமிழ் நாட்டில் மட்டுமே ஒரு தமிழ்ப் படம் இவ்வளவு வசூலைக் குவித்திருப்பது இது இரண்டாவது முறை. முதல் படம் எது தெரியுமா… அதுவும் ரஜினி படம்தான். அது ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வந்த 2.ஓ!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *