மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி!

கொல்கத்தா: 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை […]

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது விஜயகாந்த் கட்சி!

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. தே.மு.தி.க. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஜெயலலிதா ஒதுக்கியது போன்று 41 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை. இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் கட்சியாக பா.ம.க.வை அழைத்து அ.தி.மு.க. இடங்களை ஒதுக்கி கொடுத்தது. பா.ம.க. வுக்கு […]

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்! – சசிகலா திடீர் அறிக்கை

சென்னை: நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று நமக்கு ஜெயலலிதா காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும். என்மீது […]

ரஜினி அரசியல்… முடிவுக்கு வந்தது கால் நூற்றாண்டுகால எதிர்ப்பார்ப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும் என்றும் கடந்த டிசம்பர் 3-ந்தேதி அறிவித்திருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் […]

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள்வரை மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன்! – தமிழருவி மணியன்

சென்னை: வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, உடல் நிலை காரணமாக இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று நேற்று அறிவித்தார். முன்னதாக ரஜினி தொடங்க இருந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை அவர் நியமித்திருந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து தான் முற்றிலும் விலகுவதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் […]

சீரற்ற ரத்த அழுத்தம்… அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 8 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. தொற்று இல்லை என்றாலும் நடிகர் ரஜினிகாந்த ஹைதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்த நிலையில் ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து […]

‘கொரோனா தொற்றில்லை,,, ரஜினி நலம்!’

ஹைதராபாத்: ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 […]

பிக்பாஸ்… கமல் ஹாஸனை வெளுத்த முதல்வர் பழனிசாமி!

பெரம்பலுார்: அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக ஆட்சி குறித்த கமல் ஹாஸனின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “நடிகர் கமல் ஹாஸன் ஓய்வு பெற்ற பின், […]

வாடகை பாக்கி இல்லை, எந்தவித நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை! – லதா ரஜினிகாந்த்

சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தைக் காலி செய்ய, அடுத்த ஆண்டு ஏப்ரல் 30- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என, லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ராகவேந்திரா கல்விச் சங்கத்தை எச்சரித்தது. இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் தரப்பில், தான் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வாடகை பாக்கி ரூ.1.99 கோடி செலுத்த வேண்டும் என்பதில் உண்மையில்லை. […]

ரஜினி பிறந்த நாள்… பிரதமர், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்,” என்று கூறியுள்ளார். Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life. — Narendra Modi (@narendramodi) December 12, 2020 முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்தில், “திரு ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடனும் […]