கொரோனா ஓய்வில் கமல்…. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப் போவது யார்?

கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க புதிதாக பிரபல நடிகர் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். 5 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், […]

கொரோனா பாதித்த கமல் ஹாஸனை நலம் விசாரித்தார் ரஜினி!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் கடந்த 16-ந் தேதியன்று, மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமிக்க இந்திய கதர் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல் ஹாசன் அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் வட அமெரிக்க குழு நிர்வாகிகளை சிகாகோவில், கமல் ஹாசன் சந்தித்து பேசினார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய கமல்ஹாசனுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்தது. காய்ச்சலும் […]

கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று!

சென்னை:  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவு:   அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் […]

வன்னியர் சங்க மிரட்டல்… சூர்யாவுக்கு குவியும் ஆதரவு!

    ஜெய் பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் மிரட்டல் அறிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பொதுவெளியில் சூர்யாவுக்கு பெரும் ஆதரவு குவிகிறது. வன்னியர் அமைப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் […]

அண்ணாத்த-வை ஆபாசமாகப் பேசியவர்களைக் கைது செய்ய போலீசில் புகார்… முதல்வருக்கும் கோரிக்கை!

ரஜினி நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. உலகம் முழுவதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம். வெளிநாடுகளில் மட்டும் 1100 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்தது. குடும்பப் படமாக அமைந்துள்ள அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர். விமர்சகர்கள் அண்ணாத்த படத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறி வந்தனர். ஆனால் பொதுமக்கள், பெண்கள் குடும்பத்துடன் பார்த்து ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் படம் 10 […]

ரஜினிகாந்த் வீடு திரும்புவது எப்போது? – மருத்துவமனை அறிக்கை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர். தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிக்கை […]

’45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர்…’ – எஸ்பிபிக்கு ரஜினியின் உணர்ச்சிப்பூர்வ அஞ்சலி!

ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியானது. இந்தப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த எஸ்பிபி பாடிய கடைசி பாடல் இதுவே. இந்தப் பாடல் இன்று வெளியானதையொட்டி, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபியுடனான தனது பந்தம் குறித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் […]

சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு! – சச்சின் டெண்டுல்கர் விளக்கம்!

டெல்லி: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு இணையத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள், மன்னர்கள், பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பணம் பதுக்கியிருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. சுமார் 600 செய்தியாளர்களை இணைத்துள்ள இந்த அமைப்பு 14 நிதிச் சேவை அமைப்புகளிடமிருந்து கசிந்த சுமார் ஒரு […]

அரியலூரில் நீட் கொடூரம்…. மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அரியலூர்: மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய அரியலூர் […]

நீட் 2021 அனுமதி அட்டை வெளியீடு!

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே […]