வாடகை பாக்கி இல்லை, எந்தவித நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை! – லதா ரஜினிகாந்த்

1

சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தைக் காலி செய்ய, அடுத்த ஆண்டு ஏப்ரல் 30- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என, லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ராகவேந்திரா கல்விச் சங்கத்தை எச்சரித்தது.

இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் தரப்பில், தான் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “வாடகை பாக்கி ரூ.1.99 கோடி செலுத்த வேண்டும் என்பதில் உண்மையில்லை.

முறையாக மாதம் ரூ.8 லட்சம் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. ஆஷ்ரம் பள்ளியை காலி செய்ய ஏப்ரல் 2021 வரை அனுமதி உள்ளது. நீட்டிப்பு காலத்தில் அதிக வாடகை செலுத்த தேவையில்லை.

பள்ளியின் புதிய வளாகத்தில் மாணவர் சேர்க்கை நடத்த எந்தத் தடையும் இல்லை,” என்று கூறியுள்ளார்.