சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவற்றலிருந்து… * முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை. முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது. அதுபற்றி இப்போது பேசி ஒரு நொடி கூட வீணடிக்க விரும்பவில்லை. * கட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அடிப்படை […]
Category Archives: இன்றைய பரபரப்பு
தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சிதான்! – ரஜினிகாந்த்
சென்னை: அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பலரும் விவாதித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், நேற்று தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். 2021-ல் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் என்றும், அதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அதில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பதிவில், “வரப் போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் […]
நாட்டையே அதிர வைக்கும் விவசாயிகள் போராட்டம்… திட்டமிட்டு மறைக்கிறதா மீடியா?
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 6-வது நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் கலைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. […]
நிவர் புயல் தீவிரம்… செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வரும் 25-ந்தேதி நிவர் புயலமாக மாறி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒருவேளை அதிதீவிர புயலாக மாறினால் 100 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த காற்றழுத்தத்தாழ்வு மற்றும் புயல் காரணமாக நாளையில் இருந்து வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் கனமழை பெய்ய […]
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்… பாஜகவை பின்னுக்குத் தள்ளும் லாலுபிரசாத் கட்சி!
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன. இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி பின்தங்கி தற்போது பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. பீகார் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை கிடைக்கும் என என்பதில் இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. பெரும்பான்மை விவகாரத்தில் முன்னும் பின்னுமாக […]
ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்! – ‘லேட்டுதான்… ஆனா லேட்டஸ்ட்’ ட்ரெண்டிங்!!
சென்னை: நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஷ்டேகை டிரண்டாக்கி ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசிலுக்கு வரவேண்டும் என கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக ரசிகர்கள் தவம்கிடக்க, ரஜினியோ அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதில்காலம் தாழ்த்தி வந்தார். பல வருடங்களுக்கு பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாகவும், தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் கடந்த 2017ம் ஆண்டு திட்டவட்டமாக கூறினார். ஆனால், எப்போது, எப்படி என்பதை தெளிவுப்படுத்தாமல் மீண்டும் ரசிகர்களை […]
ரஜினி கையெழுத்துடன் வெளியாகி பரபரப்பு கிளப்பிய அறிக்கை!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து மக்கள் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன். என் உடல்நலம் முக்கியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்கு கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் […]
‘அந்த அறிக்கை என்னுடையதல்ல; ஆனால்..!’ – ரஜினிகாந்த்
சென்னை: சமீபத்தில் எனது பெயரில் வெளியான கடிதம் உண்மையானதல்ல… ஆனால் அதில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் உண்மை என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அறிவிப்பு வெளியிட்டார் ரஜினிகாந்த். அறிவிப்பு வெளியிட்ட கையோடு தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றி உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தினார். பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் கூட நடந்தது. வழக்கமான அரசியல் கட்சிகளுக்குள் ஏற்படும் அத்தனை சர்ச்சைகள், குழப்பங்கள் […]
முதல்வர் அய்யா… என் உயிருக்கு ஆபத்து!’ – பரபரப்பு கிளப்பிய இயக்குநர் சீனு ராமசாமி
சென்னை : கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக அறிமுகமாக்கியவர். விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என பட்டம் வழங்கியதோடு, அவரை வைத்து தர்மதுரை என்ற சூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்தார். அண்மையில் முத்தையா முரளிதரன் சினிமா விவகாரத்தில், விஜய் சேதுபதி விலகிக் கொள்வது நல்லது என முதலில் கருத்து தெரிவித்தவர் சீனு ராமசாமிதான். இந்நிலையில் இன்று காலையில் […]
திடீர் சந்திப்பு… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
சென்னை: 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசனே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. ரஜினி தரப்பில் இருந்து இன்னும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்து […]