கார்த்தியின் 27-வது படமாக உருவான மெய்யழகன் படத்தை 96 புகழ் ச. பிரேம் குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இப்படம் செப். 27 படம் திரைக்கு வருகிறது. வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அரவிந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக இது உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீக காலமாக, யு சான்றிதழ் பெறும் தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை […]
Author Archives: Dhina Cheithi
100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த விக்ரமின் ‘தங்கலான்’!
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் […]
கங்குவா… சூர்யாவின் மிரட்டல் சம்பவம்!
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பயர் பாடல் வெளியிடப்பட்டது. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியிருக்கும் கங்குவா படத்தின் முதல் பாகம் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜைக்கு திரைக்கு வருகிறது. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, […]
கொட்டுக்காளி பட முன்னோட்டம்
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம் கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். ஏற்கெனவே பெர்லின் உள்ளிட்ட சில சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்க வெளியீடாக இப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சிறப்புத் திரையிடலில் கொட்டுக்காளி படத்தைப் பார்த்த […]
பேச்சி பெரும் வெற்றி… இரண்டாம் பாகத்துக்கு தயாரிப்பாளர் தயார்!
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “பேச்சி […]
கமல் விலகல்.. நெட்டிசன்கள் வரவேற்பு… விஜய் டிவி நன்றி!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த ஆண்டு நிகழ்ச்சியின் 8ஆம் பதிப்பு ஒளிபரப்பாக உள்ள நிலையில், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல் ஹாசன் திடீரென அறிவித்தார். இது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே நேரம், சமூக ஊடக பயனர்கள் பலரும் கமல் விலகியதை வரவேற்றுள்ளனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்திய கமலுக்குக் கிடைத்த வரவேற்பு, கடந்த இரு பருவங்களில் […]
டிமான்டி காலனி 2… சாதிக்குமா?
<அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிமான்டி காலனி’ பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.< 2015ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. இப்படத்தை மு.க.தமிழரசு தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து,7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் […]
அதிக கிராஃபிக்ஸ் கொண்ட முதல் படம் மாயன்!
நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்தப் படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. அதியுச்ச கற்பனை, பரபரப்பு மற்றும் வரலாறு என மூன்று வகையில் நகரும் விதத்தில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக ‘மாயன்’ உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான […]
பிரசாந்த் நீல் – என்டிஆர் இணையும் புதிய பிரமாண்ட படம்!
கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைகோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக ‘என்டிஆர்நீல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 தொடங்கி இருப்பதால், என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர். ரசிகர்களை குஷிப்படுதுத்தும் […]
மின்மினி பட விமர்சனம்
ஊட்டி பள்ளியில் படிக்கும் எதிரும் புதிருமான இரு மாணவர்கள், ஒரு கட்டத்தில் நட்பாக முயல்கிறார்கள். அப்போது இருவரில் ஒருவன் மூளைச் சாவடைகிறான். அவனது இதயம் ஒரு பெண்ணுக்குப் பொருத்தபடுகிறது. அந்தப் பெண்ணும் பள்ளி சேர்கிறாள். தனக்கு இதயம் கொடுத்தவனின் நண்பனுக்கு உதவ முற்படுகிறாள். ஆனால் அவன் பள்ளியை விட்டு விலகி விடுகிறான். இருவரும் பின்னர் இமயமலையில் சந்திக்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி. உண்மையில், படத்தின் கதை என்ன… படம் எப்படி இருக்கும்..? என்றெல்லாம் […]