கடலுக்கு நடுவே 125 நிமிடங்கள்..!

வெறும் ஒன்பது கதாபாத்திரங்களை ஒரு சிறு படகில் வைத்துக் கொண்டு 125 நிமிடங்களை சுவாரஸ்யமாய் கொண்டு செல்ல முடியுமென்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சிம்புத்தேவன். தரவுகளோடு கூடிய கூர்மையான வசனங்கள் திரைப்படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன உடன் யோகிபாபு தனது நடிப்பினால் அசத்தியிருக்கிறார். பிழைப்பிற்காக வெளியூர்களிலிருந்து நகரத்திற்குள் படையெடுக்கும் கூட்டமும், பெரும் வணிகங்களும், தொழிற்சாலைகளும், நகர விரிவாக்கமும் ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் பூர்வகுடிகளை என்ன செய்கிறது? நகரின் மையத்தை விட்டு வெளியே நகர்த்தப்படும் போது உளவியல் ரீதியாய் அவர்களுக்கு ஏற்படும் […]

அப்போ கும்கி யானை… இப்போ மம்போ சிங்கம்… பிரபு சாலமனின் புதிய படம்!

மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பிரபு சாலமன். தனித்துவமான கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதில் காதலைப் பேசுவது இவர் பாணி. இவர் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும் கும்கி ஆகிய படங்கள் பெரிய வசூல் வெற்றியையும் பெற்றன. ஆனால் சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) தலைப்பு மற்றும் முதல் தோற்றம் வெளியீடு!

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனப் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனும் […]

மெட்ராஸ்காரன்… மீண்டும் ஐஸ்வர்யா தத்தா!

எஸ் ஆர் புரொடக்சன் சார்பில் பி.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ்காரன். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் பி.ஜெகதீஸ்  பேசியதாவது: “நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் […]

தமிழ் சினிமாவில் பேச வைக்கும் படமாக பேச்சி அமையும்!’

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி […]

தனுஷ் இயக்கத்தில் ராயன்… முன்னோட்டப் படம் வெளியீடு!

தனுஷின் 50வது படம், அவர் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் ராயன். தனுஷுடன் துஷாரா விஜயன், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் என பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்ட படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் 12 மில்லியனுக்கும் அதிகமான […]

எதிர்ப்பு இந்தித் திணிப்புக்கா… திராவிட மொழிக் கொள்கைக்கா? – கீர்த்தி சுரேஷ் பதில்

தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல […]

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சி

வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார், நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, “முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன. என் தம்பி நகுல் […]

இனிமையில் நனைய வைத்த வாழையின் ‘தென் கிழக்கு…’ பாடல்

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வாழை”. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் […]

தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் வள்ளியம்மா பேராண்டி!

முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப் பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் சிவகாமி IAS பேசியதாவது: “அன்பு சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. ஒரு முறை கேஜி குணசேகரனை என் ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது என் அம்மா அவர் பாடல் கேட்டு […]