சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பயர் பாடல் வெளியிடப்பட்டது. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியிருக்கும் கங்குவா படத்தின் முதல் பாகம் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜைக்கு திரைக்கு வருகிறது. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 12 அன்று இப்படத்தின் இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு டிரைலர் வெளியாநது. 2:37 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் பெருமாச்சி மண்ணை காக்க போராடுபவராக வித்தியாசமான வேடத்தில் சூர்யா தோன்றுகிறார். சூர்யா, பாபி தியோல் இடையேயான சண்டை தான் இந்த முன்னோட்ட படத்தின் மையமாக உள்ளது.

சூர்யா – பாபி தியோல் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன படக் காட்சிகள். டிரைலர் வெளியான இருபத்து மூன்று மணிநேரத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது

கங்குவா முன்னோட்டம்:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *