கார்த்தியின் 27-வது படமாக உருவான மெய்யழகன் படத்தை 96 புகழ் ச. பிரேம் குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இப்படம் செப். 27 படம் திரைக்கு வருகிறது.

வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அரவிந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக இது உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

சமீக காலமாக, யு சான்றிதழ் பெறும் தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்த சூழலில் ஆக்சன் இல்லாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படமாக மெய்யழகன் உருவாகியிருப்பதால், குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெய்யழகன் படத்தை சூர்யா – ஜோதிகா தங்கள் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். 

மெய்யழகன் ட்ரைலர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *