வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து தந்த உபேந்திரா, ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்கி நடித்திருக்கும் படம் யு ஐ. அதாவது உலகளாவிய நுண்ணறிவு. ‘புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுங்கள்’ என்று அறிவிதுவிட்டுத்தான் படத்தை தொடங்குகிறார் உப்பி. கதைப்படி அவர் ஒரு திரைப்பட இயக்கநர். அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சிலர் பித்துப் பிடித்தது போல் ஆகிறார்கள். அந்தப் படத்தை ஒரு தரப்பு கொண்டாட, மற்றொரு தரப்பினர் தடை செய்ய […]
Author Archives: Dhina Cheithi
‘கூரன்’ திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு: மேனகா காந்தி வேண்டுகோள்!
கூரன் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் […]
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் விடுதலை 2
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகம் விடுதலை என்ற பெயரில் வெளியாகி கடந்த ஆண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியா தவிர, உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான […]
400 கோடியைக் கடந்த வேட்டையன்!
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் வேட்டையன். அக்டோபர் 10ம் தேதி உலகெங்கும் வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. படம் வெளியான 4 நாட்களில் 240 கொடியைக் குவித்தது வேட்டையன். இடையில் மழை குறுக்கிட்டாலும், படத்துக்கு தொடர்ந்து பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதன் விளைவாக உலகெங்கும் இந்தப் படம் 23 நாட்களில் ரூ 400 கோடியை […]
கிருஷ்ணா நடிக்கும் மலை!
யோகிபாபு , லக்ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஐபி முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள். மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக […]
ரஜினியை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட ‘லக்கி பாஸ்கர்’
லக்கி பாஸ்கர் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று புதன்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, “லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்புதான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக […]
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகும் வேட்டையன்!
லைகா நிறுவனத் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி இதுவரை ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்தப் படம் உலகெங்கும் நாளை 7000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் […]
ரஜினிகாந்த்துக்கு என்ன நடந்தது… வீடு திரும்புவது எப்போது?
சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அஙஅகு அவருக்கு சிகிச்சை முடிந்துள்ளது. இப்போது ரஜினி உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. கூலி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், அடிவயிற்றில் வலி மற்றும் லேசான நெஞ்சு வலி காரணமாக திங்கள்கிழமை இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்தார். இதற்கு அவர் ஏற்கெனவே மருத்துவமனையில் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு வழக்கமான சோதனைகள் […]
துணை முதல்வராகப் பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அமலாக்கத் துறை […]
சொகுசுக் கப்பலில் வெளியான பன் பட்டர் ஜாம் படத்தின் இரண்டாவது தோற்றம்!
Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்’. இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது தோற்றம், நடுக்கடலில் கோர்டிலியா குரூஸ் சொகுசுக்கப்பலில், வெளியிடப்பட்டது. தமிழ் திரை வரலாற்றில் […]