முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஜினிகாந்த், இளையராஜா!

  சென்னை: தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மார்ச் 1-ம் தேதி வியாழன் கிழமை தனது 70 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு ஒரு நாள் முன்பாகவே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: “எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட […]

ரஜினியின் ஜெயிலரில் தமன்னா!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கிறார். அவர் எதிர்மறை நாயகனாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் நடிக்கும் தகவலை […]

மறுவெளியீட்டில் வரலாறு படைத்த ரஜினியின் பாபா!

ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து நடித்த படம் பாபா. இந்தப் படம் ரஜினியைப் பொறுத்தவரை அவரது மனதுக்கு மிக நெருக்கமான படம். அவரது அரசியல், ஆன்மீக நிலைப்பாட்டை அழுத்தமாகச் சொன்ன படம். 2002-ல் இந்தப் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானது. ஆனால் அரசியல் சூழ்ச்சி, மீடியாவின் ஒருதலைப்பட்சமான விமர்சனங்கள் காரணமாக எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் 107 அரங்குகளில் 50 நாட்களும், 25-க்கும் அதிகமான திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனைப் படைத்தது பாபா. […]

ஒரு மறுவெளியீட்டுப் படத்துக்கு நள்ளிரவு, அதிகாலை சிறப்புக் காட்சிகள்… அதான் நம்ம பாபாவின் சிறப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2002-ல் வெளியான பாபா படம், மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்துக்கு சமீப காலமாக, சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு மிகவும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12.12.2022 அன்று ஒரே ஒரு காட்சியாகத் […]

லவ் டுடே இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்!

  சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் […]

புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா – தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் ரஜினிகாந்த்

பெங்களூரு: கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் பவர் ஸ்டார், அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். 45 வயதில் அவர் மரணம் அடைந்தது கன்னட திரையுலகை மட்டுமல்ல, கன்னட மக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியது. அவர் திரைத்துறையில் பணியாற்றி கொண்டே, மற்றொருபுறம் சமூக சேவைகளை ஆற்றி வந்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் […]

காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியா முழுமைக்குமான திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால், ஒரு வாரம் கழித்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் இப்படத்தை வெளியிட்டனர். மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா தற்போது வெளியான அனைத்து மொழிகளிலுமே வசூல் வேட்டை செய்து வருகிறது. குறிப்பாக தமிழ் மற்றும் இந்தியில் தீபாவளிப் […]

ரஜினி நடிக்கும் இரு புதிய படங்களைத் தயாரிக்கிறது லைகா நிறுவனம்!

சென்னை: இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிகேஎம் தமிழ்க் குமரன். சில நிமிட சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த தமிழ்க் குமரன், “தற்போது ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்துக்குப் பிறகு, லைகா நிறுவனத் தயாரிப்பில் இரண்டு புதிய படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற […]

கடலூரில் ‘ஜெயிலர்’ சூட்டிங்கில் ரஜினி: நேரில் பார்க்க அலைமோதும் ரசிகர்கள்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் என்ற கிராமத்தின் அருகே நடைபெற்று வருகிறது. புதுவை மாநில […]

ரஜினியைச் சந்தித்த சரத்குமார்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பின் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் தனது மகள் வரலட்சுமியுடன், ரஜனியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார்.   இந்த சந்திப்பு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]