வாஷிங்டன்: 2020-ல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே, அதிக பாதிப்புக்குள்ளானது அமெரிக்காதான். அங்குதான் அதிவேகமாகப் பரவத் தொடங்கியது கோவிட் 19 எனும் கொரோனா. பின்னர் 2021-ல் டெல்டா வைரஸ் பரவியபோதும், பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது அமெரிக்காதான்.

இப்போது கொரோனாவின் மூன்றாவது திரிபான ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸின் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இந்த நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டிவிட்டது. கடந்த ஜனவரி 10-ம் தேதி அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மட்டும் 14லட்சத்து, 17 ஆயிரத்து 489 பேர். தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் ஒரு நாள் பாதிப்பு 10 லட்தசத்துக்கு மேல் இருந்துவந்தது. இதுவரை எந்த நாட்டிலும் ஒரு நாளில் இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டதில்லை. நேற்றும் ஒரு நாள் தொற்று 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 7 கோடியே 22 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அதேபோல, நேற்று ஒரே நாளில் 2150 பேர் இந்நோய்த் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை இதுவரை 8.71 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *