மனதை வருடும் இளையராஜாவின் ‘ ஜமா ‘ பாட்டு!

1

இன்றைய காலகட்டத்தில் தமிழ் திரை இசை என்பது வெறும் சத்தமாகிவிட்டது என்பதுதான் இசை விரும்பிகளின் கருத்து.

இந்தக் கருத்தை மாற்றும் வகையில் அவ்வப்போது சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

முன்பு ‘வழி நெடுக காட்டுமல்லி…’ வெளியாகி பரவசப்படுத்தியது. இப்போது அதற்கு இணையாக இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது. காட்டுமல்லி தந்த அதே இளையராஜாதான் இந்தப் பாடலையும் கொடுத்துள்ளார்.

நீ இருக்கும் உசரதுக்கு… என்று தொடங்கும் அந்தப் பாடலை ஜமா படத்துக்காக இளையராஜாவே எழுதி இசை அமைத்துள்ளார். ராஜ கணபதி – ஶ்ரீஷா பாடி உள்ளனர்

கூழாங்கல் படத்தைத் தயாரித்த எஸ் எஸ் பிவி லேர்ன் அண்ட் டீச் நிறுவனம் இந்த ஜமா படத்தைத் தயாரிக்கிறது. பாரி இளவழகன் நடித்து இயக்கியுள்ளார். அவருடன் சேத்தன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார் இளையராஜா.

பாடல் கேட்க..

படத்தின் டிரெய்லர்