அமெரிக்கா: மேலும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை!

பிலடெல்பியா: அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கழுத்தில் டெரெக் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு எழுந்த போராட்டங்களால் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் வன்முறை குறித்தும், கருப்பினத்தவர் மீது காட்டப்படும் பாகுபாடுகள் குறித்தும், இனவெறி […]