கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டியில சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் இந்த விழாவில் இயக்குநர்கள் லிங்குசாமி, மிஷ்கின், பிருந்தா சாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிஞர்கள் ஜெய பாஸ்கரன், மு. முருகேஷ், பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூபாய் 25000, இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000, மூன்றாவது பரிசாக ரூபாய் பத்தாயிரம், பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 50 கவிதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் என ஒரு லட்ச […]

விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , […]

ஜூலை 5 முதல் திரையரங்குகளில் எமகாதகன்!

அறிமுக இயக்குநர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எமகாதகன் திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி கண்ணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார்… ஒளிப்பதிவு – எல் டி, படத்தொகுப்பு ராம்நாத். இப்படத்தில் கார்த்திக், மனோஜ் , ராஷ்மிதா ஹிவாரி , சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் […]

பிடிக்காமல் போன பெண்ணுடன் வரும் காதலை சொல்லும் ‘மிஸ் யூ’!

மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய ஹிட் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். கருணாகரன், பாலசரவணன், ‘லொள்ளு சபா மாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பை கவனிக்கிறார். பாடல்களை மோகன்ராஜன் எழுதியுள்ளார். சித்தா என்கிற உணர்வுப்பூர்மான கதையம்சம் கொண்ட வெற்றிப் படத்திற்கு […]

பயமறியா பிரம்மை பட விமர்சனம்

உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் ஒரு எழுத்தாளனுக்கும், சிறைக்குள்ளிருக்கும் ஒரு கொலைகாரனுக்கும் இடையிலான உரையாடல்தான் இந்த பயமறியா பிரம்மை எனும் ஒன்றரை மணி நேரப் படம். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான கபிலன், 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்த சிறைக்கைதி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையைக் கதையாக எழுத அவரை சிறையில் சந்திக்கிறார். அங்கே தன்னுடைய எழுத்துகளைப் படைப்புகள் எனக் கபிலன் சொல்ல, தன்னுடைய கொலைகளும் ஒருவிதத்தில் படைப்புகள்தான் என ஒவ்வொரு கொலைகளாக விளக்குகிறார் ஜெகதீஷ். […]

ரயில் பட அனுபவம்

ரயில் பயணங்கள்தான் பால்ய காலத்தின் அதிசயம். மரங்கள் ஏன் ஓடுகின்றன என்று கேள்வி எழுந்த பருவம். எப்போதும் நமக்கு ரயில்தான் புதிய மனிதர்களை, புதிய பிரதேசங்களை, புதிய வாழ்க்கையை காட்டிக்கொண்டே இருக்கிறது. ரயில் பயணம், வற்றாத நதியாக வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். டிஸ்கவரி சினிமாஸ் வேடியப்பன் தயாரிப்பாளராகவும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராகவும் அறிமுகமாகும் திரைப்படம் ரயில். பிழைப்புக்காக புலம் பெயரும் வடமாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மண்ணில், தமிழ் மனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அழகிய காட்சிகளுடன் […]

‘மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோர்த்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், “எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு […]

இசைப் புயலும் நடனப் புயலும் இணையும் மூன் வாக்!

இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய ஏ ஆர் ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள எதிர்பார்த்து வந்த நிலையில், ‘மூன் வாக்‘ எனும் அட்டகாசமான தலைப்பை, Behindwoods நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR ரஹ்மான், […]

கல்கி 2898 கிபி… பைரவா கீதம்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெரும் காத்திருப்பிற்கு பிறகு “கல்கி 2898 கி.பி.” படத்திலிருந்து, ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, “பைரவா ஆன்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள். பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் இந்தப் பாடல், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்கி 2898 கிபி திரைப்படம், திரையுலகின் மாயாஜாலம் எந்திரார்கள். இது இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், காமிக்-கான் சான் டியாகோவில் முத்திரை பதித்த முதல் இந்தியத் திரைப்படமாகும், இது அனிமேஷன் முறையில் முன்னுரை […]

விஜய் பிறந்த நாளையொட்டி துப்பாக்கி மறுவெளியீடு!

விஜய்யின் பழைய படங்களை மறு வெளியீடு செய்வது தொடர்கிறது. அந்த வரிசையில் இப்போது துப்பாக்கி. விஜய் படங்களில் செம ஹிட்டடித்த படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கு கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்தது. லியோ படம் வெளியான பிறகு, ஆண்டு இறுதியில் அவரது சச்சின் படத்தை கமலா திரையரங்கம் மறுவெளியீடு செய்தது. பின்னர் கில்லி படத்தை மறுவெளியீடு செய்தனர். அந்தப் படம் பெரிய வசூலைப் பெற்றது. 50 நாட்களுக்கும் மேல் ஓடிய கில்லி. கிட்டத்தட்ட ரூ 20 […]