RED FLOWER படத்தின் புதிய லுக் போஸ்டர்… வெளியிட்டார் விஜய் சேதுபதி

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் ‘RED FLOWER” ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் ஆண்ட்ரூ பாண்டியன்’. தனது வித்தியாச நடிப்பால் ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டரை வெளியிட்டார். இப்படத்தில் விக்னேஷ் பாத்திரமும் அவரது தோற்றமும் , நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும் என்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன். மீண்டும் ஒரு […]

விடுதலை 2 முதல் தோற்றம்

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது! இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன. இந்த நேரத்தில், விஜய் […]

கலவை விமர்சனங்கள்… கல்லா கட்டுதா இந்தியன் 2?

லைகா நிறுவனம் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. இத் திரைப்படம், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் குடும்பங்களோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளியான பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியான […]

கதைப் பற்று… சதைப் பற்று.. இதான் சினிமாவுக்குத் தேவை! ‘ – பார்க் பட விழா

பார்க் பட விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது, “இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார். சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை. அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் […]

மலையாளம், தமிழில் மீண்டும் களமிற lங்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா!

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மலையாளத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளவர். சில நாட்களாக சந்தித்து வந்த, தன் உடல் நிலை பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு மீண்டு விட்டார். அவர்மீது அன்பு கொண்ட ரசிகர்களின் வேண்டுதல்கள் அந்த இறைவனுக்கே […]

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

திருமணம் முடித்ததும் வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசியதாவது: “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை […]

இந்தியன் 2 பட விமர்சனம்

  28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுதந்திரப் போர் என்ற முழக்கத்தோடு திரையில் களம் இறங்கி இருக்கிறார் இந்தியன் தாத்தா. முதல் பாகத்தில் ஹாங்காங் தப்பிச் சென்ற இந்தியன், மீண்டும் வரமாட்டாரா… நாட்டில் தலை விரித்தாடும் லஞ்சம், ஒழுங்கின்மையை களையெடுக்க மாட்டாரா என ஏங்கும் ஒரு இளைஞர் கூட்டம், சமூக ஊடகம் மூலம் அவருக்கு விடும் அழைப்பு உலகெங்கும் வைரலாகிறது. தைவான் தலைநகர் தைபேயில் வர்மக் கலை கற்றுத் தரும் பயிற்சி மையம் வைத்திருக்கும் இந்தியன் […]

பன் பட்டர் ஜாம்… ஒரு வித்தியாசமான அறிமுகம்!

Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் பான் பட்டர் ஜாம் படத்தைத் தயாரிக்கிறார். ‘எண்ணித் துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தைத் தயாரிக்கிறார். சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின் 30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக […]

நவாசுதீன் சித்திக் நடிக்கும் ‘ரவுது கா ராஸ்’

ஹத்தி பட வெற்றிக்குப் பிறகு, ZEE5, ZEE ஸ்டுடியோஸ் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் “ரவுது கா ராஸ்” படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு ZEE5 இல் வெளியான நவாசுதீன் சித்திக் நடித்த ஹத்தி திரைப்படத்திற்கு ஹைதராபாத் நகரில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தனது சமீபத்திய நேரடி-டிஜிட்டல் படமான ரவுது கா ராஸ் படத்தை வெளியிட்டுள்ளது. ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாட் ஃபிஷ் ரெக்கார்ட்ஸ் […]

துபாய் வான் வெளியில் ‘ கம் பேக் இந்தியன் ‘!

  இந்தியன் 2 படத்தை உலகம் முழுக்க பல ஆயிரம் அரங்குகளில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கேற்ற வகையில் படத்தின் விளம்பரப் பணிகள் உலகளவில் வேகமெடுத்து உள்ளது. ஏற்கெனவே சென்னையில் தொடங்கி, மும்பை, மலேசியா, சிங்கப்பூரிலெல்லாம் படத்தின் புரொமோஷனை நடத்தி முடித்த படக்குழு, அடுத்து துபையில் விண்ணில் பறந்து படத்தினை விளம்பரப்படுத்தினர். துபாய் நகரின் கடற்கரை வான் வெளியில் பாராசூட்டில் பறந்தபடி, கம் பேக் இந்தியன் என்ற பாடல் முழங்க, இந்தியன் 2 […]